இன்னும் 15 நாட்களில் வீடு திரும்புவார் முதல்வர்! - பொன்னையன் தகவல் - VanakamIndia

இன்னும் 15 நாட்களில் வீடு திரும்புவார் முதல்வர்! – பொன்னையன் தகவல்

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் வீடு திரும்புவார். உடல்நிலை தொடர்பான முக்கிய காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. தற்போதுஅவருக்கு பிசியோதெரபி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன,” என்று தெரிவித்தார். .

முதல்வர் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்றும் எப்போது வீட்டுக்கு திரும்பலாம் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் ரெட்டி கூறியது பற்றிய கேள்விக்கு, ‘முதல்வர் முழுமையாக குணம் அடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனபதுதான் அனைவரின் விருப்பமாகும்’ என்று பொன்னையன் பதிலளித்தார்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!