ட்ரம்பின் அடாவடி.. அமெரிக்காவுக்கு தெற்கே வலுவாக கால் பதிக்கும் சீனா! - VanakamIndia

ட்ரம்பின் அடாவடி.. அமெரிக்காவுக்கு தெற்கே வலுவாக கால் பதிக்கும் சீனா!

மெக்சிகோ சிட்டி(மெக்சிகோ): நாஃப்தா(NAFTA) என்று சுருக்கமாக சொல்லப்படும் வடஅமெரிக்க வர்த்தக உடன்பாட்டை மாற்றுவேன்,என்று ஒற்றைக் காலில் நிற்கிறார் ட்ரம்ப். இது தான் சந்தர்ப்பம் என்று மெக்சிகோ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலுவாக கால் ஊன்றுகிறது சீனா.

மெக்சிகோ பார்டரில் சுவர் கட்டுவேன். அதற்கான செலவை 30 சதவீத இறக்குமதி வரி விதித்து மெக்சிகோவிடமிருந்து வசூலிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறிவருகிறார்.

30 சதவீத வரி கட்டினால் மெக்சிகோ பொருட்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு இருக்காது மெக்சிகோவின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும்.

அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்று மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியது மெக்சிகோ. அங்கே பெருமளவில் ஆட்டோமொபைல்ஸ் சம்மந்தப்பட்ட உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம்.

அதைச் சரியாக உணர்ந்து கொண்ட சீனா, அங்கு புதிய ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது. சீனாவின் ஜாக் மோட்டார்ஸ், மெக்சிகோவின் ஜயண்ட் மோட்டார்ஸுடன் கை கோர்த்துள்ளது.

ஜாக் மோட்டார்ஸ் 200 மில்லியன் டாலர்களை மெக்சிகோவில் முதலீடு செய்கிறார்கள். புதிய SUV மாடல்களை உற்பத்தி செய்து லத்தீன் அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் கைப்பிடியில் இருக்கும் பனாமா கால்வாய்க்கு மாற்றாக, நிக்காரகுவா நாட்டுடன் இணைந்து பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்க புதிய மாற்று வழித் தடத்திற்கு திட்டமிடுகிறார்கள்.

170 மைல்கள் நீளம் கொண்ட இந்த புதிய கால்வாய் வெட்டப்பட்டால், பனாமா கால்வாயில் கோலோச்சி வரும் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்படும்; இந்த கால்வாய் தொடங்குவதற்கு நிக்காரகுவாவில் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இன்னும் திட்ட வடிவிலேயே இருக்கிறது.

நிக்காரகுவாவின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு ரெடிமேட் துணிகள், வாழைப்பழம் மற்றும் விளைபொருட்கள் ஏற்றுமதி சார்ந்ததாக இருக்கிறது. நிக்காரகுவா நாட்டுடன் வெளிப்படையாக அமெரிக்காவுக்கு எந்த பெரிய சிக்கலும் இல்லை.

ஆகையால் புதிய கால்வாய் வெட்டும் திட்டத்தை அமெரிக்கா முறியடித்து விடும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருக்கிறது.

ஆனாலும் ட்ரம்பின் புதிய அணுகுமுறையால், அமெரிக்காவுக்கு பின்வாசலுக்கே சீனா வந்து கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்!

-இர தினகர்

China is utilizing President Trumps new policies towards Mexico and other Latin countries. China’s Jac motors is investing 200 billion dollars in Mexico’s Giant Motors. This joint venture is expected to produce SUVs for Latin market. Also there is a plan to build new canal, alternative to Panama canal thru Nicaragua. China is actively looking for new markets in Latin America, the backdoor of United States.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!