சான்டியாகோ: தெற்கு சிலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்தனர். - VanakamIndia

சான்டியாகோ: தெற்கு சிலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு சிலியில் லாஸ் லேகாஸ் என்ற இடத்தில் வில்லா சான்டா லூசியா என்ற சிறிய கிராமம் உள்ளது. இதன் அருகே பிரபல தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலாவாசிகள் அதிகம் வருவது உண்டு.

இந்த நிலையில், அங்கு பெய்து வந்த கனமழையை தொடர்ந்து, அந்த பகுதியில் நில சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 15 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நில சரிவினால் பள்ளிக் கூடம் ஒன்று மற்றும் பல்வேறு வீடுகளும், சாலைகளும் சேதமடைந்துள்ளன. வாக்கு மையம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் இக்கிராமத்தினர் வாக்களிக்கவில்லை.

இத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினெரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!