கொந்தளிப்பில் நெடுவாசல்… சென்னை மெரீனாவில் போலீஸ் குவிப்பு!

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். இக்கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடவுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளது.

இதனிடையே மெரீனா கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்டட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காக போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *