வெட்கக் கேடு! - VanakamIndia

வெட்கக் கேடு!

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே எண்பதுகள் தொடங்கி நடந்து வரும் பிரச்சினை இப்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

ஆறுகளின் நீரைப் பங்கிடுவதில் சர்வதேச அளவில், எதிரி நாடுகள் கூட இப்படி சண்டைப் போட்டதில்லை என்று கூறும் அளவுக்கு, தமிழகத்துக்கு எதிராக கர்நாடகம் கல்லெறிந்து கொண்டிருக்கிறது.

சரித்திரம் மன்னிக்க முடியாத, பிற்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது ஒவ்வொரு கன்னடரும் வெட்கித் தலை குனிய வேண்டிய அளவுக்கு மோசமான கலவரம் இது.

கர்நாடகம் தன் சொந்தத் தண்ணீரை தமிழகத்துக்குத் தரவில்லை. அணைகட்டு மடக்கி வைத்திருக்கும் தமிழகத்தின் பங்கைத்தான் தருகிறது. இதைக் கூட உச்ச நீதிமன்றம் வரை போய் கேட்டுப் பெற வேண்டிய நிலை தமிழகத்துக்கு. இதுதான் கர்நாடகத்துக்கு மிகப் பெரிய வெட்கக் கேடு.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாமல், அந்த மாநில விவசாயி கஷ்டப்படும் சூழல் என்றால் தமிழகம் பெருந்தன்மையாக அமைதி காத்திருக்கும். அடிப்படையிலேயே அந்த உணர்வு தமிழகத்துக்கு உண்டு. ஆனால் நிஜம் என்ன தெரியுமா… காவிரியை முழுமையாக மடக்கி அணைகள், குளங்கள், வாய்க்கால்கள் என அனைத்தையும் நிறைத்து வைத்துக் கொண்டுள்ளது கர்நாடகம். இதன் விளைவு கர்நாடகத்தில் ஆண்டு முழுவதும் நீர்நிறைந்து ஓடும் காவிரி நதி, தமிழகத்தில் மட்டும் வறண்ட பாலையாய் காட்சி தருகிறது.

உலகில் எந்த நதியையும் எந்த நாடும் இப்படி மடக்கி வைத்துக் கொண்டு சண்டியர்த்தனம் செய்ததில்லை. ஆற்று நீரை தன் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டு மீதியை கடை மடைக்கு விடவேண்டும். அதில் ஒரு பகுதி கடலிலும் கலக்க வேண்டும். அப்போதுதான் பயிர்ச் சூழலும் உயிர்ச்சூழலும் சமநிலைப்படுத்தப்படும்.

இதையெல்லாம் கொஞ்சமும் மனதில் கொள்ளாமல், குறைந்தபட்சம் மனிதர்களாகக் கூட நடந்து கொள்ளாத கன்னட வெறியர்கள் காலத்தால் கூட மன்னிக்க முடியாதவர்கள்!

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!