நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் ப்ளாட்பாரத்தில் ஏறிய கார்: ஒருவர் பலி 16 பேர் படுகாயம் - VanakamIndia

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் ப்ளாட்பாரத்தில் ஏறிய கார்: ஒருவர் பலி 16 பேர் படுகாயம்

நியூயார்க் : நியூயார்க் மேன்ஹாட்டனில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் ப்ளாட்பாரத்தில் கார் ஏறியதால் ஒருவர் பலியானார். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நியூயார்க்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். எப்போதுமே மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும் இடமும் ஆகும்.

விபத்து பற்றி அறிந்தவுடன் மாநில கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ மற்றும் நியூயார்க் நகர மேயர் பில் தே ப்ளாசியோ சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர்ஸிலிருந்து ஒரு மைல் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. ட்ரம்பின் மனைவியும் மகனும் இன்னும் ட்ரம்ப் டவரில் வசித்து வருகிறார்கள். ட்ரம்புக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள இடத்தை போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அதி வேகமாக வந்த கார் நிலை தவறி ப்ளாட்பாரத்தில் ஏறியுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

காயம் அடைந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இங்கு தினம் தோறும் வருகை தருகின்றனர். ஏராளமான இந்தியர்களும் டைம்ஸ் ஸ்கொயருக்கு சுற்றுலாவுக்காக செல்வது வழக்கம்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!