அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கனடா! - VanakamIndia

அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கனடா!

canada-syria-migrants

டொரன்டோ: வரும் 2017-ம் ஆண்டு 3 லட்சம் அகதிகளை அனுமதிக்கப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

அகதிகள் என்றாலே முகம் சுளித்து திருப்பி அனுப்பும் நாடுகள் உள்ள சூழலில், 3 லட்சம் அகதிகளை ஏற்பதாக கனடா அறிவித்துள்ளது இன்ப அதிர்ச்சிதானே!

சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில்leVd கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் நாட்டில் 3 லட்சம் அகதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டும் இதே எண்ணிக்கையைldதான் கனடா அறிவித்தது நினைவுக் கூரதக்கது.

நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையைkd கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வருகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!