போவோமா கலிஃபோர்னியா - ஒரு மினி பயணத்தொடர் - 4 - VanakamIndia

போவோமா கலிஃபோர்னியா – ஒரு மினி பயணத்தொடர் – 4

ஆறாம் நாள் எங்கள் பிளான் படி ‘சாண்டியாகோ’விலிருந்து ‘சான்பிரான்சிஸ்கோ ’12 மணிநேர கார் பயணம்,ஹைவே எண்1 ரூட்டில் போனால். சீக்கிரமாக கிளம்பினோம். இந்த ரூட்டில் தான் பசிபிக் பெருங்கடலின் அழகை நாம் வழிநெடுக அனுபவித்துப் பார்த்துக் கொண்டே போக முடியும்.

மனசு ரொம்பவும் எக்ஸைட்டாக இருந்தது.’டாணா பாயிண்ட்’ முடிந்து ‘லகுனா பீச்’ வந்தது.அங்கு உள்ள கடைகள்,வீடுகள் எல்லாம் பசிபிக் ஓசனின் கரையில் ! வீடுகளுக்குப் பின்னால் ‘பேக் யார்டு’ சரிந்து,பசிபிக் கூப்பிடு தூரத்தில்!,”ஓ,,மை,காட் , வாட் எ லவ்லி,”!

இதனை விடக்கூடாது என முடிவு எடுத்து,நாங்கள் ஒவ்வொரு 20 அல்லது 25 மைல்கள் தூரத்திற்கு ஒருதரம் காரை நிறுத்தி,அந்த தெருக்களில் இறங்கி கடல் வரை சென்று பார்த்து அனுபவித்தோம் ! இந்த பயணம் இனிய கடற்கரை பயணமாக, களைப்பே தெரியாத பயணமாக இருந்தது.

இரவு பத்தரை மணி அளவில் ‘சன்னிவேல்’லுக்கு,20 நிமிட தொலைவில் உள்ள ‘ரெட் வுட் சிட்டி’ஹோட்டலில் இருந்தோம். அடுத்த 5 நாட்களும் தங்கப் போவது இங்குதான்.

ஏழாம் நாள் பிளான்,’சிலிக்கான் வேலி’. ‘சன்னிவேலில்’ இருக்கும் ‘ஹை ப்ரொபஃபைல் ஆபிஸ்களை பார்த்துவிட்டு வரக் கிளம்பினோம். முதலில் கண்களில் பட்டது ‘மைக்ரோ சாஃட்’. உங்களுக்கு யார் ஞாபகம் வருகிறது,’பில் கேட்ஸ்’!,ஆமாங்க, அந்த மனுஷனோட உழைப்புனு எல்லாரும் பேசிக்கிறாங்க. பில்டிங் நன்றாக இருக்கிறது.நம்ம ஊர்க்காரர்கள் போக வர இருந்தனர்.

அடுத்து போனது-நம்ப ‘கூகுள்’. வாவ் !! என்னவென்று புரியவில்லை,கூகுள் ஆபிஸை பார்த்ததும் என்னென்னவோ மனதில் ஓடுகிறது. உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தமாக அனைவரையும் காண ஆசை ! அப்புறமென்னங்க சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி?’என்றாலும் நொடியில் ஆன்சர். ‘நார்தன் லைட்ஸ்’ எங்கிருந்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்றாலும் உடனே பதில்! ‘ஒரு நல்ல பல் டாக்டர் வேணும்’ என்றதும் எனக்கே தெரியாத பக்கத்துக்கு தெருவில் உள்ள டென்டிஸ்ட் கேட்டதும் கொடுப்பவனே கூகுள், கூகுள்!!

கூகுளோடு போட்டோஸ் எடுத்துக்கொண்டு அடுத்து போனது-‘யாஹூ ‘.யு எஸ் கொடியோடு,யாஹூ கொடியும் சேர்ந்து பறக்கிறது.மிகப் பெரிய ஆபிஸ்,திரும்பிய பக்கமெல்லாம் இந்தியர்கள்! அடுத்து போனது, ‘ஆப்பிள்’. ஒரு கடி கடித்த அந்த ‘ஆப்பிள்’ பக்கமும் ஒரு வெள்ளைக்காரரைக் கூட பார்க்கலைங்க .எங்கும் இந்தியர்!எதிலும் இந்தியர்! வாசலில் நின்று ‘தம்’ அடிப்பவரும் நம்மாளு! சுடிதாரில் ஆபிஸ் உள்ளே நுழைவதும் நம்மாளு தான் !

இதையெல்லாம் விடுங்க,ஸ்ட்ரீட்லாம் கூட,’ஜாவா,கூகுள்’ என ‘சிலிக்கான் வேலி’ ரிச் வேலி தாங்க !இதையெல்லாம் பார்த்துவிட்டு என் பெண்,என் கணவரிடம்,இங்கு வேலை பாக்கணும் என்றும்,எவ்வளவு சம்பளம் என்றும் ஒரே கேள்விகள் தான். நேராக லஞ்ச் ‘ஆனந்த பவன்’. சென்னையில் சாப்பிடுவதுபோலவே இருந்தது. சூடான,சுவையான லஞ்ச்!

சாப்பிட்டுவிட்டு கிளம்பியது,’பிக் ஸர்’.இரண்டரை மணிநேர கார் பயணம். அங்கு என்ன ஸ்பெஷல் என்றால்,எண்பது அடி உயரத்திலிருந்து,ஒரு அருவி விழும் இடம்,’கடல்’ . சுத்தமான நீர், உப்பு தண்ணீரோடு கலக்குகிறது. மிகவும் அமைதியில், இயற்கையின் அழகு கொஞ்ச, அந்த கரும் மலைகளுக்கு நடுவே ஒரு குகை போன்ற பகுதியிலிருந்து,வெள்ளை வெளேர்’ என்று ஒரு அருவி கடலோரத்தில் விழ,கடல் அலை வந்து வந்து அதை ருசித்துவிட்டு போகும் அந்த அதிசியம்!

ஆஹா,அற்புதம் !நாம் இறங்கி நடக்க ஒற்றையடி பாதை போல அமைத்துள்ளனர்.அதல பாதாள பள்ளத்தாக்கு. அங்கு ‘விஸ்தா பாயிண்ட்’ உள்ளது.அங்குநின்று வசதியாக பார்க்க முடியும். அருவி அருகில் போகமுடியாது.அந்த இடத்தில மட்டும் நீரின் கலர் ‘டர்காயிஸ்’எனப்படும் பச்சை கலரில்.கொஞ்சம் தள்ளி கடலின் கலர் நீலம் !வாட்டர் பால்ஸ்’ வெள்ளை, மலைத்தொடர் கருப்பு, நாங்கள் சென்ற நேரம் மாலை என்பதால் இளம் ஆரஞ்சு கலர்,யோசித்துப் பாருங்கள்,, கடவுளின் கைவண்ணத்தை !அதன் அழகை வீடியோவில், எங்கள் மனத்திலும் அள்ளிக்கொண்டு,’ரெட் வுட் சிட்டிக்கு திரும்பினோம். இன்றைய நாள் மிக அருமை !!

எட்டாம் நாள் காலையில் பிரேக் பாஸ்ட் ஆனதும் சான் பிரான்சிஸ்கோ பஸ் டூர் கிளம்பினோம்.’கோ-எஸ்-எப்-ஓ கார்டு’ வாங்கியதால்,வசதியாக இருந்தது. பஸ் ஏறும் இடம் மிகவும் பிரபலமான,”பிஷெர்மேன் வார்ப்’,இங்கிருந்து,’க்ரே லைன் பஸ்’ஸில் டூர். மற்ற இடங்களை விட,சான் பிரான்சிஸ்கோ குளிராக இருக்கிறது.எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’!! அதை பார்க்கப் போகிறோம், அதன் மேலேயே ட்ராவல் பண்ணப் போறோம்,போட்டில் சென்று டாப் அண்ட் பாட்டம் பார்க்கப் போறோம் என திரில்லாக இருந்தது! ஏனெனில் அதன் வரலாறு அப்படி! பிறகு சொல்கிறேன் அதனை.

பஸ் டூரில் மிக அழகாக இந்த ஊரின் அந்தந்த தெருக்களின் பெருமை,சிறுமைகளை கூறியபடியே வந்தார் கைடு. விதவிதமான கட்டிடக்கலைகள் கொண்ட,பல நாட்டின் டிசைன்கள் கொண்டு கட்டப்பட்டு உள்ள வீடுகள்,தெருக்கள், அனைத்து நாட்டு உணவும் கிடைக்கும் இடங்கள்,சைனா டவுன்,’மிஸஸ் டவுட் பாயர்’ படத்தில் ராபின் வில்லியம்ஸ் வீடு என பல இடங்களை பார்த்துவிட்டு,போன அடுத்த இடம். ‘க்கருக்கட் ஸ்ட்ரீட்’

‘.ஹாப் ஆன் ஹாப் ஆப்’ பஸ் என்பதால் க்கருக்கட் ஸ்ட்ரீட்’டில் இறங்கி கொண்டோம்.அட,,ட,,டா நடக்கணும், நடக்கணும்.. சாரிங்க, ஏறணும்,ஏறணும்,யம்மாடி !அரை மைல் தூரத்திற்கும் மேலே செங்குத்து ரோடுங்க,மக்கள் வசிக்கும் ஏரியா தான்.மலை மேலே கட்டி வைத்திருக்கிறார்கள். நடுவே தடுமாறி விழுந்தால்,உருண்டபடி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

ஒருவழியாக ஏறிப்போனால்,ஒரு கூட்டம் எதையோ எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். காம்பௌண்ட் வால் போல கட்டி வைத்திருக்கிறார்கள்.நாங்களும் அருகில் போய் பார்த்தோம் . இப்போ ஏறி வந்தோமில்லையா,,அப்படியே இறங்கினால் எப்படி இருக்கும்,,அப்பிடி ரோடு,ஜிக்-ஜாக் போல,சைடில் கார்டன்,இரு பக்கமும் ரெகுலர் வீடுகள்,மிகவும் வித்தியாசமான ஸ்ட்ரீட்! ஆனால் எப்படித்தான் கார் பார்க் பண்ணி வாழ்கிறார்களோ?பார்க்க அழகாய்தான் இருக்கிறது.ஆனால் எனக்கு பிரீயா வீடு கொடுத்தா கூட,சத்தியமா நான் வேண்டாம்னு சொல்லிடுவேங்க !

அடுத்த பஸ்ஸில் ஏறிக் கொண்டோம்.’ஹிப்பி’களை சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம்.அவர்கள் கூட்டம் கூட்டமாக யார் தொந்தரவும் இல்லாமல் வாழும் ஒரு ஸ்ட்ரீட் தான் ‘ஹைட் ஸ்ட்ரீட்’. (Haight Street ). இங்கு ட்ரக்ஸ் டீலிங்ஸ் அதிகமாக நடக்கும்.மாலைநேரங்களில் இங்கு வருவதை தவிர்த்தல் நல்லது என்கிறார் கைடு.

மிீண்டும் பஸ்ஸில் ஏறி ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ பார்க்க பயணம்.முதலில் ஜி ஜி பிரிட்ஜ் வழியே,அந்தப்பக்க தீவான ‘சாஸலீடோ’ போனோம்.மிகவும் அழகான ஊர்.இயற்கை எழில் மிகுந்து,குளிராக,சுற்றிலும் தண்ணீர் பரவி,,ரம்யமாக இருக்கிறது.இங்கு நிறைய படகு வீடுகள் பார்த்தோம்.உலகப் போரின் போது கடல்படை போர்க்கப்பல்கள் (Marine shipyards) வைக்கப்பட்டிருந்ததாம்.போர்வீரர்களுக்கு கட்டப்பட்ட பல வீடுகள் இன்றும் உள்ளன.

இப்போ நம்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம். ஏனென்றால்.. பல வருசமா கனவிலேயே இருந்த ‘கோல்டன் கேட் பிரிட்ஜ் ‘ பாக்கப் போறோம் !!

பயணம் தொடர்கிறது…

– ஷீலா ரமணன், டெக்சாஸ்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!