போவோமா கலிஃபோர்னியா - ஒரு மினி பயணத்தொடர் - 3 - VanakamIndia

போவோமா கலிஃபோர்னியா – ஒரு மினி பயணத்தொடர் – 3

நான்காம் நாள் ’சாண்டியாகோ ஜூ’ போனோம். சாண்டியாகோவில், ‘பால்போ’ பார்க்கில் இருக்கும் இந்த ஜூ,650 வகைப்பட்ட,3700 மிருக வகைகளைக் கொண்டது !.மிகப் பெரிய மிருககாட்சி சாலை! .எல்லா அனிமல்ஸ்களுக்கும் உங்கள் சார்பாகவும் ‘ஹாய்’ சொன்னேன். உலகிலேயே அதிக அளவில் சந்தாதாரர்களை கொண்ட ஜூ என்கிறார்கள்.

உள்ளே சென்றதும் முதல் அட்ராக்ஷன் ‘சிங்கம்’,மிகப் பெரிய்ய்ய சிங்கம்! சிலை தாங்க. அதனோடு நின்று உங்கள் இஷ்டத்துக்கு போட்டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.சரியா எடுக்கலைனா அது உங்களை கொல்லும்ன்னு ஒருத்தர் பயங்காமிச்சுக் கொண்டிருந்தார். சபரிமலை ஐயப்பன் போல என் பெண் அதில் ஏறி உட்கார்ந்தும்,சிங்கத்தை அடக்கிய வீரக் கணவரும்,அதன் வாயையே தடவிக் கொடுத்த வீர தமிழ்ப்பெண் நான்! இப்படி வித விதமான போட்டோஸ் எங்களிடம் உள்ளது.

அடுத்து பஸ் சவாரி, டபிள் டக்கர் பஸ்.ஜாலியாக இருந்தது.மேலே அமர்ந்து எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தோம்.பஸ் சவாரியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி கொள்ளலாம். கேபிள் காரில் போனோம். முழு மிருகக்காட்சி சாலையும் சுத்திப் பார்க்க மிக சௌகரியமானது ‘கேபிள் கார்’. அதற்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டும். நாங்கள் மட்டும் ஒரு கேபிள் காரில். மிக உயரமான மரங்களின் மேலே செல்கிறது.

இந்த பக்கத்திலிருந்து,அந்த பக்கம் இறங்கி, அங்குள்ள மிருகங்கள், பறவைகளை கண்டு ரசித்தோம். அப்படி பார்த்துக் கொண்டே வரும்போது, தூரத்தில் ஒரே கூட்டம்.நாங்களும் சென்று பார்த்தால்,சொன்னால் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள் ! ஜூ வில் பணிபுரியும் இருவர்,ஒரு யானைக்கு ‘Pedicure ‘ பண்ணிக் கொண்டிருந்தனர் ! அது ஒழுங்காக காலைக் காட்ட வேண்டும் என்பதால், இந்த பக்கம் ஒருத்தர் வாயில் ஊட்டிக்கு கொண்டிருக்கிறார். என்ன ஒரு வில்லத்தனம் இல்லே?

இன்னொரு யானை வெயிட்டிங்! சமத்தாக, ஒரு கால் முடிந்ததும், இன்னொரு காலை அழகாக காட்டுகிறது! யானைக்கு ‘Pedicure ‘ செய்வதை இப்போதுதான் பார்த்திருக்கிறோம். அன்று நாங்கள் பார்க்காத மிருகங்களே இல்லை என்று சொல்லலாம் ! நம் கையாலேயே அவைகளுக்கு தீனியும் கொடுக்கலாம், சாதுவானவர்களுக்கு மட்டுமே.

நண்பர்களே,ஷீலா சொன்னால் என்பதற்காக, புலி வாயில் கை விட்டால், நான் பொறுப்பல்ல !. முழுவதும் கால் வலிக்க வலிக்க சுற்றி பார்த்தோம். ‘போலார் பியர்’ கொஞ்சம் அழுக்காய்தான் இருந்தது. வெள்ளைவெளேர் என இல்லை.’பாண்டா’ தான் குழந்தைகள் சாய்ஸ்! சர்க்கஸ் காட்டியது குழந்தைகளுக்கு ! அட்டகாசம் பண்ணியது!

வெளியே வந்தோம், பசி எடுத்தது.எங்கள் சாய்ஸ் ‘சென்னை டிபன்ஸ்’ போனோம். மிகவும் டேஸ்ட்டான டின்னர்.3 பேருக்குமே மிகவும் பிடித்தால் நாளையும் இங்கேதான் என முடிவுடன் ஹோட்டல் திரும்பினோம். நிம்மதியாக ஒரு தூக்கம்!!

ஐந்தாம் நாள், என் பெண் ஸ்ருதி’யின் ஒரு வருடக் கனவான ‘லெகோ லேண்ட்’. மிக மிகப் பெரிய ஒரு ப்ளே ஏரியா தான் ‘லெகோ லேண்ட்’. அங்கு நுழைவு பாதையிலிருந்து, வெளியேறும் பாதை வரை வைக்கப்பட்டுள்ள அத்தனையும், ‘லெகோ’ பீஸினால் செய்யப்பட்ட பொம்மைகள்,சிலைகள்! அது தான் ரொம்ப சிறப்பு ! கலர் புல்லான அழகான ஓரிடம்.

முதலில் ஒரு பெரிய்ய க்யூ .இங்கு மட்டும் இல்லைங்க, கடந்த 5 நாட்களுமே அதனை ஷோ க்களும்,இடங்களும் எளிதாகவெல்லாம் உள்ளே போக முடியலைங்க.ஏகப்பட்ட க்யூ.நம்ம ஊர் கோவில் வரிசை காட்டிலும் பெரிய பெரிய வரிசைகள்! எங்கும் ஜனங்கள்! சரி விடுங்க.. பொறுமை பொறுமை..

அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செல்போனிலேயே காட்டிவிடுவதால் ரொம்ப வசதி.உள்ளே போனால்…அடேயப்பா..நம்மளை நாமளே மறக்கடிக்கும் குழந்தைகள் உலகம்! நாங்களும் ஏறாத,விளையாடாத இடம் இல்லை! ‘போட்டிங்’ போனோம்.போட்டிபோட்டுக் கொண்டு, சுயமாக பெடலிங் செய்தபடி,ஜாலியாக இருக்கிறது. விதவிதமான விளையாட்டுகள்,ரோலர் கோஸ்டர் ரைடு.

குழந்தைகளே லெகோ பீஸை வைத்து பில்டிங் கட்ட ஆயிரக்கணக்கான ‘லெகோ பீஸ்’கொட்டிவைத்திருக்கும் இடம்! என அசத்துகிறார்கள்! குழந்தைகளுக்கு ‘டிரைவிங் ஸ்கூல்’,கோ-கார்ட் போல தனியே மினி காரில் ஏறி,சிக்னல் சட்ட திட்டங்களுக்கு ஏற்றபடி கார் ஓட்டி திரும்ப வேண்டும். வந்ததும் ‘டிரைவிங் லைசென்ஸ்’ தருகிறார்கள். என் பெண் கேட்ட கேள்வி-“இதை வைத்து உங்கள் காரை நான் ஓட்டலாமா,?”

அடுத்து போன இடம் வாட்டர்பார்க் .முதலில் டாலர்ஸ் கட்டி லாக்கர் எடுத்து நம் உடைமைகளை வைத்துவிட்டு,உடை மாற்றி வாட்டர் ஏரியாக்கு சென்றோம்.மிகவும் என்ஜாய் பண்ண வேண்டிய ஓரிடம்.தண்ணீர் ட்யூப்களில் ஏறி உட்கார்ந்தோ,படுத்துக்கொண்டோ சுற்றிச் சுற்றி வர வேண்டியதுதான்.ஓடும் நதி போல இருப்பதால் நாமும் மிதந்தபடி சுற்றலாம்.ஒரே விளையாட்டுதான்! யார் யாரை இடித்துத் தள்ளினாலும் கோபித்துக்கொள்வதில்லை.ஒரு பஃன் பிளேஸ்!

வெளியே வரவே மனம் இல்லாத என் பெண்ணை,”நெஸ்ட் வீக்கே வேற வாட்டர் பார்க் போலாம்,ப்ளீஸ் வா” என கெஞ்சிக் கூட்டிக்கொண்டு வந்து,உடைமாற்றி ‘பை,பை’சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்,’வாட்டர் வேவ்ஸ்'(செயற்கை கடல் அலை ) ஒரு 200 பேருக்கும் மேலாக ஒரே நேரத்தில் இருக்கக்கூடிய திறந்தவெளி நீச்சல் குளம் ! தரையிலிருந்து 5 அடிவரை தண்ணீர் இருக்கும்.ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் அலைகள் செயற்கையாக பண்ணுகிறார்கள்.அது நம்மை தூக்கித்தூக்கிப் போடும்.ஒரே ஆரவாரம்! கொண்டாட்டம்!இந்த ‘வாட்டர் வேவ்ஸ்’ எல்லா வாட்டர் பார்க்கிலும் இருக்கிறது.

நேற்றைய திட்டப்படி ‘சென்னை டிஃபன்ஸ்’,அருமையான டின்னர். வெஜிடேரியன் ப்ரியர்களுக்கு அருமையான இடம். இதுவரை காலை உணவும்,இரவு உணவும் தான் சரியான நேரத்திற்கு சாப்பிட்டோம், மதியம் மட்டும் எப்போ பசிக்கறதோ அந்த டைமில் என்ன கிடைக்கிறதோ, சாப்பிட்டு சமாளித்தோம்.எந்த கஷ்டமும் இல்லை.நான் இங்கே மட்டுமல்ல,எந்த ஊருக்கு,எந்த நாட்டுக்குச் சென்றாலும் ரைஸ் குக்கர் + சில பொடிவகைகள் கையோடு கொண்டுபோய் விடுவேன்.மிகவும் உதவியாக இருக்கும்.

அப்போதுதான் போட்ட திட்டப்படி நிறைய இடங்களை பார்க்கவும் முடிகிறது.எங்கள் வீட்டினர் சொல்வதுபோல, எங்களால் ஆர்டிக்க்கும் போக முடியும், அண்டார்டிகாவுக்கும் போக முடியும்! “ப்யூர் வெஜிடேரியன், இவர்களால் சர்வைவ் பண்ண முடியாது சில தினங்களுக்கு மேல் “,என சொல்லும் நண்பர்களுக்கு பதில்.சர்வைவ் பண்ண முடியாமலா,4 ,5 நாடுகள்,அதும் சுற்றிப் பார்க்க இல்லைங்க,வருடத்திற்கும் மேலே வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறோம்! மனமிருந்தால் மார்க்கமுண்டு!

இதனால் சொல்ல வருவதுஎன்னவென்றால்,’அம்மா-அப்பாக்களே,!உங்கள் வீட்டுப் பிள்ளைகள்,”அம்மா,நீ சாப்பிடுற மாதிரி ஒண்ணுமே கிடைக்காது, வந்தா சிரமப்படுவாய்” என்று சொன்னால்,நான் சொன்னவற்றை கையோடு பேக் பண்ணிக்கொள்ளுங்கள்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ டிக்கெட்டை புக் பண்ணு” என்று சொல்லுங்கள்.

பயணம் தொடர்கிறது…

– ஷீலா ரமணன், டெக்சாஸ்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!