போவோமா கலிஃபோர்னியா! – ஒரு மினி பயணத்தொடர் – 2 - VanakamIndia

போவோமா கலிஃபோர்னியா! – ஒரு மினி பயணத்தொடர் – 2

இரண்டாம் நாள் கோ-கார்டு,எல் ஏ (GO-CARD LA )எடுத்துக் கொண்டோம். அவர்கள் வரச்சொல்லும் இடத்திற்குச் சென்று, அவர்களது ‘பஸ் டூர்’ எடுத்துக்கொண்டால், மினிமம் 29 அட்ராக்சன்ஸ் கவர் பண்ணலாம் என்கிறார்கள். நம்மால் 10 ,12 மிக முக்கியமான இடங்களை பார்த்தாலே நேரம் சரியாகிவிடும். வீட்டிலேயே பார்க்க விரும்பிய இடங்களை நோட் பண்ணிக்கொண்டு வந்ததால், ஹாப்-ஆன், ஹாப்-ஆப் பஸ்ஸில் சக்ஸஸ்புல்லாக கவர் பண்ணினோம் !

பஸ் டூரில் வசதி என்னவென்றால், ஊரின் பெரும்பான்மையான தெருக்களை,அதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கொண்டே வருவார்கள். அதே போல இந்த ‘ரெட் அண்ட் கிரே லைன்’ பஸ்,செலிப்ரட்டீஸ் வீடுகள் உள்ள ஏரியா,’மார்லின் மன்றோ’ வாழ்ந்த வீடு,அவர் இறந்த வீடு,’பிவர்லி ஹில்ஸ்’, மிக ரிச்செஸ்ட் ஷாப்பிங் ஏரியா-‘சாண்டா மோனிகா’ முழுதும் காண்பித்தார்கள்.ரோடியோ டிரைவ் ஏரியாவில் ஹாலிவுட் பிரபலங்கள் ஷாப்பிங் செய்யும் கடைகள் உள்ளன.

மார்லின் மன்றோவின் பிரபலமான வாசகம் கேள்விப்பட்டிருப்பீங்க. ” Give a girl the right shoes and she can conquer the world “. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து,அம்மா அப்பா மனநிலை சரியில்லாததால் , பிறரால் வளர்க்கப் பட்டு, பிழைப்பிற்கு ஒரு தொழில் சினிமாவில் சேர்ந்து, உலகப் புகழ் பெற்று விட்டாள் தன் 36 வயதிற்குள்.!! 1962 லேயே ,அதிகம் சம்பளம் வாங்கின நடிகை-200 மில்லியன் டாலர்கள்!!

அவங்களோட மிகவும் பிரசித்தி பெற்ற, (ஐகானிக்) வெள்ளை கவுன் , 4.3மில்லியன் டாலருக்கு விற்றுப் போயிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் இல்லையா! இன்று கலிஃபோர்னியா சுற்றி பார்க்கப்போன நமக்கு டூர் பஸ்சில், அவர் இறந்த வீட்டை (12305 ,5th ஹெலினா ஹோம் ) கிராஸ் பண்ணும்போது சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !!

ஏஞ்சலினா ஜோலியும், ப்ராட் பிட்டும் எதிரில் வருவார்களோ என்றுகூட தோன்றியது ‘மாலிபு’ சுற்றிப்பார்க்கும்போது ! ஹாலிவுட் பற்றி நான் நிறைய பேசியபடி வந்ததால்,அந்த கைடு எனக்கு பிரண்ட் ஆகிவிட்டார். ‘வெனீசா மார்ஸில்'(டிவி நடிகை) இந்த பார்க்கிற்கு அடிக்கடி வருவாள்,ஷி இஸ் வெரி ஸ்கின்னீ’ என பேசிக் கொண்டே வந்தார். இப்போ ‘ப்ராட் பிட்’ என்ன படம் பண்றார்?,யார் கூட இருக்கார்? அல்லது ‘பிராட் பிட்’ னா யார் என எதுவுமே தெரியாத என் அருமை கணவர்,எங்களை விநோதமாகப் பார்த்தார் !

‘ரோமிற்குப்போனால் ரோமானியர்களைப்போல இருக்கணும்’ என்பதைப் போல,போற இடத்தைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ! முன்னமே கொஞ்சமாவது தெரிந்து இருந்தா போகிற இடம் இன்னும் பிடிச்சுப் போகும் தானே!

‘ஹால் ஆப் ஃப்வேம்’ ஹாலிவுட் பிலிவார்டில் கிழக்கிலிருந்து மேற்கே (2.1 km ) 1.3 மைல் நீளத்தில் இருக்கிறது. இங்கு 2600 பித்தளையில் பிரபலமானவர்கள் நட்சரத்திரங்களில் பெயர் பதிக்கப்பட்டியிருக்கிறது. ஸ்டார்களை நிமிர்ந்துதானே பார்ப்போம், இங்கே கீழே தரையில் பார்த்துக்கொண்டே நடக்கலாம்.

பிறகு,’லா ப்ரா தார் பிட்’ (La Brea tar bit ) போனோம்.இந்த இடத்தில் பூமியின் கீழே பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்திய எரிமலை இன்னும் கனன்று கொண்டிருக்கிறதாம்! அதன் வெளிப்பாடுதான் இந்த குறிப்பிட்ட இடத்தில் ‘குபுக் குபுக்’என தார்,ஒரு சிறு குளம் வடிவில் கண்களுக்குத் தெரிகிறது! சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் சூழப்பட்டுள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய விதவிதமான விலங்குகளின் எலும்புக்கூடுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டு,’பேஜ் மியூசியத்தில்’ (Page museum) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.10,000 வருஷத்திற்கு முந்தைய ஒரு பெண்ணின் எலும்புக்கூடு,1904 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு,இங்கு வைக்கப்பட்டுள்ளது.மிகவும் அதிசயமான இடம்தான்!

அடுத்த பஸ் பிடித்து போன இடம் ‘மேடம் துஸார்ட் வேக்ஸ்
மியூசியம்’.ஹாலிவுட் பிரபலங்கள் பலரது சிலைகள்,மெழுகினால் செய்யப்பட்டு அச்சு அசலாக வைக்கப்பட்டிருக்கும்.நாங்கள் லண்டனில் இந்த மியூசியம் பார்த்து விட்டோம்.அப்போது,என் பெண் கைக்குழந்தை. அவளுக்காக இப்போது மீண்டும் போனோம்.

ஜாக்கி சான், வில் ஸ்மித், ஏஞ்சலினா ஜூலி, ப்ராட் பிட், ஜூலியா ராபர்ட்ஸ், அர்னால்டு, முன்னாள் அதிபர் மிஸ்டர் ஒபாமா என எல்லாரும் என் பெண்ணோடு நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள்! இது எப்படி இருக்கு! லண்டனில் பிரிட்டிஷ் பிரபல பாப் ஸ்டார் ‘எல்டன் ஜான்’ உருவத்தை 126 கேஜி டைரிமில்க் காட்பாரீஸ் சாக்லேட்டிலேயே செய்து வைத்திருப்பார்கள் ! இவற்றைப் பார்த்துவிட்டு,வழி நெடுகிலும் நடக்கும் ரோடு ஷோக்களை பார்த்துவிட்டு,நேராக ‘வுட்லேண்ட்ஸ் ‘வந்தோம்.டின்னர் முடித்து வந்து நல்ல தூக்கம் !

மூன்றாவது நாள் ‘கலிஃபோர்னியா சயின்ஸ் சென்டர்’போகலாம் என்ற பிளான். ‘பிரேக் பாஸ்ட்’முடித்து காரில் கிளம்பினோம். இங்கு விண்வெளிக்கு சென்று வந்த ரிடையர்டு ஆர்பிட்டர் ‘என்டேவர்’ வைத்திருக்கிறார்கள். மிகவும் அழகான ஓர் இடம். உள்ளே இதுவரை ‘ஸ்பேஸ்’க்கு அனுப்பப்பட்ட அத்தனை ராக்கெட்களின் புகைப்படங்கள், அதன் வெற்றி-தோல்விகள்,சாதனைகள் அனைத்தையும் படித்து மிகவும் ஆச்சரியப்பட்டோம்!

ஒரு 3 -D ஷோ உண்டு.விஞ்ஞானிகள் ‘ஸ்பேஸ்’க்கு தயாராகும் முறை பற்றியும்,’ஸ்பேஸ்’ ஸ்டேஷன் பற்றியும் அழகாக காட்டுகிறார்கள்.பிறகு ‘ஸ்டுமுலேட்டரில்’ ஏறினோம்.ராக்கெட் கிளம்பும் அதிர்வும்,பூமியை விட்டு வெளியேறும் அனுபவமும் நமக்கு கிடைக்கிறது.

கலிஃபோர்னியா சயின்ஸ் சென்டரில் உள்ள “IMAX” ஏழு மாடி உயரத்தில், 90 அடி அகலத்தில் இருக்கிறது ஸ்க்ரீன்.இது ஆஸ்கர் அவார்ட் எனப்படும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் விருது வாங்கியதாகும். இங்கு ஒரு 3 D ஷோ பார்த்தோம்.’காலாபகஸ்’ (Galapagos) அது ஒரு தீவைப் பற்றியது. மிக விசித்திரமான, பிரமாண்ட ஸைஸ்க்ளில் ஊர்வன, நடப்பன, பரப்பன, என அனைத்தும் பார்க்கலாம். சார்லஸ் டார்வினின் அறிவியல் ஆராய்ச்சியில் இத்தீவு மிக முக்கிய பங்கு உண்டு. மிக வித்தியாசமான, மிக தனிமையான அனுபவம் வேண்டுமெனில் காலாபாகஸ் போகலாம்.

இன்னும் நிறைய பார்க்கவேண்டியவைகள் இருக்கிறது. அதில் ஒன்று “எக்கோ சிஸ்டம்”, இதில் உயிரினங்கள் எப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வாழ்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம். 8 ஜோன்கள் பார்த்தோம். அதில் ‘பாரஸ்ட் ஜோன்’ மிக அற்புதம்.! 188 ஆயிரம் காலன்ஸ் டேங்க் தண்ணீர் நிரம்பிய குகைப்பாதையில் நாம் விதவிதமான, கோரல் ரீஃஸ் மற்றும் பலவற்றை பார்த்து, ரசித்துக் கொண்டே நடக்கலாம்.

வெளியே ‘ரோஸ்’ கார்டன்.ரசித்துவிட்டு எங்கள் பிளான் படி அன்று மாலையில் ‘சாண்டியாகோ’ கிளம்பினோம்.2 மணிநேரப் பயணம்.நைட் ‘ஹாலிடே இன்’னில் ஸ்டே.ரொம்ப டீசெண்டாக இருந்தது.அடுத்த 3 நாட்களும் இங்கேதான்.

பயணம் தொடர்கிறது..

– ஷீலா ரமணன், டெக்சாஸ்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!