போவோமா கலிஃபோர்னியா! - ஒரு மினி பயணத்தொடர் - 1 - VanakamIndia

போவோமா கலிஃபோர்னியா! – ஒரு மினி பயணத்தொடர் – 1

“எங்கே போறதா ஐடியா, இந்த ஹாலிடேய்ஸ்க்கு, ?”

“வெகேஷன்ல என்ன ப்ளான், ?”

“சம்மர் கோர்ஸ் சேர்க்கப் போறிங்களா ?”

“இந்தியா ட்ரிப்பா ?” இப்படிப்பட்ட பல கேள்விகள் ஆரம்பிக்க,, “போ மனமே போ” என எங்கையாவது போலாமா என முடிவெடுத்ததின் விளைவு, எங்கள் கலிஃபோர்னியா ட்ரிப் !

ஐடியா கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! எங்கே தங்கலாம், எங்கே வெஜிடேரியன் புட் கிடைக்கும், என்னனென்ன பார்க்கலாம் என அழகாய் ஐடியாக்கள் கொடுத்தார்கள். 1 நாள் டூராக போகலாம் என முடிவு செய்தோம். ஒருவாரம் முன்பே ஃப்ளைட் புக்கிங், ஹோட்டல் புக்கிங், ரென்டல் கார் புக்கிங் என எல்லா வேலைகளும் நடந்தது. அந்த நாளும் வந்தது !

மாலைநேர ஃப்ளைட், நல்ல மூடு இருந்த பைலட், அதனால் நல்ல படியாக கலிஃபோர்னியா நேரப்படி இரவு 9 :40 க்கு போய் சேர்ந்தோம் லாஸ் ஏஞ்சல்ஸ்.

முதல் நாள். எங்கே போகணும் என ப்ளான் இருந்ததால் குளித்து, ஹோட்டல்லேயே பிரேக்பாஸ்ட் முடித்து, போன இடம் “யூனிவேர்சல் ஸ்டூடியோ” பபபபப்பா…. பபபபப்பா.., நம்ப ஊர் ஜெமினி ஸ்டுடியோவின் படம் பார்த்தால், ஆரம்பத்தில் ட்வின்ஸ் இசைக்கருவி முழங்க மியூசிக் வருமே,, அதுதான் என் காதில் கேட்டது ! “வாவ்”,, நம்மில் பலரின் கற்பனை உலகம் ! இத்தகைய இடங்களுக்கு, நம்மை குழந்தைகளாக மாற்றும் அற்புத சக்தி உள்ளது !

“எதை முதலில் பார்ப்பது ? எந்த ஷோ இப்போ ஆரம்பம், அந்த ஷோவ்வுக்கு கீழே போகணும்”..என ஒரே பரபரப்பு! முதலில் ‘யூனிவேர்சல் ஸ்டூடியோ’ என்று பதித்த அந்த பெரிய பந்தின் (உலக உருண்டை போல) முன் நின்று போட்டோஸ் எடுத்து கொண்டோம். அது தானேங்க போயிட்டு வந்ததுக்கு முதல் சாட்சி !

என் பெண் ஷ்ருதி, ஒரு மாதம் முன்பே முடிவு செய்திருந்த ‘டிஸ்பிக்கபெல் மின்னியன் 3-D ஷோவ்வுக்கு முதலில் போனோம். அடேயப்பா…குட்டிக் குட்டி உருண்டை மின்னியன்ஸ் இங்கும் அங்கும் ஓடும் போது நம்மையும் சேர்த்து இடித்துத் தள்ளிக்கொண்டு, ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போனோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! அங்கே ‘மின்னியன்ஸ்’ தண்ணீரில் ‘தொபீர்’ என விழும்போது நம் மீதும் தண்ணீர்!

வெளியே வந்தோம். வழியெல்லாம் புகைப்படங்கள் எடுத்தோம். அடுத்து ‘டைனோசர் வேர்ல்ட்’, அது ஒரு வாட்டர் ரைடு வேறு..ஆஹா..’போட்டில்’ ஏத்தி சுத்தி சுத்தி, ஒரு காட்டில் போவது போல உணர்வை உண்டாக்கி, திடீர் திடீர் என ‘ஹேர்பிவோர்ஸும், கார்னிவோர்ஸும்’ நம் மேல் பாய்வது போல வர, நாங்களும் பாசாங்காக, ஆ..ஊ, என கத்தி சிறு குழந்தைகளானோம்.

வாட்டர் ரைடு என்றாலே நமக்கு கொஞ்சம் ‘பேஸ்மெண்ட் வீக்’ ..ஆனா வெளியில சொல்லறதுஇல்லைங்க.. ‘பில்டிங் ஸ்ட்ராங்’ தான். என் கணவர் வெங்கட், ‘சும்மா ஒரே ஒரு ஸ்லைடு தான்’ என கேஷுவலாக சொன்னதுலாம் பொய்ங்க..’போட் ‘ டை மேலே ஏத்தறான்னா எறங்கத்தானே . . . இறங்கினான் பாருங்க …அடிவயிறு ஜிவ்வுனு…தடால்னு தண்ணீரில் விழுந்து, வாட்டர் ஸ்ப்ளாஷ் வேற…பாதி நனைந்து வெளியே வந்தோம். ஆனா சூப்பரா இருந்துதுங்க.

அடுத்து ‘ட்ரான்ஸ்பார்மர் ஷோ’ போனோம். ‘எக்ஸ்ட்ராடினரி’னு சொல்லலாம்! .இந்த 3-D ரைடு புல்ஸ்ஸ்கோர் அள்ளிக்கிட்டு போறது ! கிட்டத்தட்ட நாமே அந்த பைட்டு நடுவுல சிக்கி திணறுவது போல இருக்கிறது! பெரிய பெரிய இரும்பு உருவங்கள், கட்டிடங்கள் எல்லாம் பீஸ் பீஸாக சிதறி, நம் மீது தெறிக்கும் உணர்வு! நாமும் சேர்ந்து ரைடு போகிறோம். மறக்கவே முடியாத அனுபவம்.

வெளிய வந்தோம். ‘ஸ்டார்பக்ஸ்’ ல ஒரு ஸ்ட்ராங் காபி குடித்து, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அடுத்த ஷோ,. போகும் வழியில் விதவிதமான கேரக்ட்டர்கள்,அதன் காஸ்ட்டியும்களில் டோரா,ஷ்ரக்க், ஸ்பாஞ்சுபாப், மின்னியன்…

அடுத்து ‘ஷ்ரக் 4 D ஷோ ‘. டீவியில் என் குழந்தையோடு பல முறை பார்த்ததுதான். அதை, அதனுடைய எடத்தினுள்ளே ஒரு ரைடாக அழைத்துப்போனது , அப்புறம் ஷ்ரக் நண்டுகளை ஒவ்வொன்றாக கீழே போட, அது நூற்றுக்கணக்கில் பெருகி ஓடும்போது, நம் கால்களிலெல்லாம் ஏறுகிறது . சிறு துளைகளில்’ விண்டு போர்ஸின் ‘ மூலம் காற்று அடிக்கிறது சீட்டின் அடியில்.எல்லாரும் கத்தியபடி கால்களை தூக்கிக் கொண்டோம். ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது. அந்த அரசன் தன் உடைவாளை எடுத்து குத்தும்போது, நம் சீட்டின் முதுகுப் புறத்திலும் ஒரு குத்து விழுகிறது. மிகவும் நேச்சுரலாக இருந்தது.

வெளியே வந்தோம், ஸ்டார் வார்ஸ் மெட்டல் உருவங்கள் நடமாடிப்படி வருகிறார்கள்.அடுத்து குழந்தைகளின் மிகப் பிடித்த ‘கிங்க்-காங்க் 360 3 D ‘போனோம்.கிங் காங் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.கீழே உட்கார்ந்து பார்த்த நாம், உள்ளே ரைடு போனால் எப்படி இருக்கும்,?!.சூப்பர் ரைடு! முதலில் பஸ்ஸில் அடர்ந்த காட்டில் மிரட்சியோடு பிரயாணம் செய்கிறோம். திடீரென மிக அருகில் டைனாசர்கள் வந்து நம்மை தாக்கவர, நம்ம கிங் காங் பாய்ந்து வந்து தடுக்க, டைனாக்களுக்கும் நம்ம ‘காங்’க்கும் படுபயங்கர பைட் . இரண்டுக்கும் நடுவுல நாம இருக்கோம்! .ஒரு ஸ்கிரீன் ஏரியா அது,பஸ் நின்று விட்டது என பின்னால்தான் தெரியும்.

அடுத்தது ‘ஸ்பெஷல் எபெக்ட் ஸ்டேஜ் ‘ பார்த்தோம்.”இப்படி அடர்ந்த காட்டுக்குள் எப்படித்தான் கஷ்ட்டப்பட்டு படம் எடுத்தாங்களோ?’ன்னு நாம் லிவிங் ரூமில் பார்த்து வியந்த விஷயங்கள் அத்தனையும் ஒரு ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சின் உதவியால் டைனோசர்களை தொட்டு நடிப்பது போல, வானாந்திரத்தில் சுற்றித் திரிவது போல அனைத்தும் எடுப்பதை மிக அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.

இதேபோல படங்களில் பார்க்கும் பல கட்டிடங்கள் உடைந்து நொறுங்குவது, வெள்ளம் பெருக்கெடுப்பது,லீகுய்ட் காஸ் லீக் ஆவது,’பிவெர்லி ஹில்ஸ் காப், காப்2 ,காப்3 இவைகளில் நடப்பவை அப்படியே நம் கண்முன் காண்பிக்கிறார்கள்! கிரேட் ஜாப்!

டைனாசர்கள் விரட்ட, நாங்கள் கத்தியபடி ஓடுவது போல கிராபிக்ஸ் போட்டோ எடுத்துக்கொண்டோம். பாக்கணுமா?,வாங்க காட்டுறேன். இதை அனைத்தும் பார்த்துவிட்டு, பசி மறந்து,நம்மையும் குழந்தைகளாகவே மாற்றிய ஒரு இடமாக இருந்தது ‘யூனிவேர்சல் ஸ்டூடியோ’.

இரவு ஆகிவிட்டது! ப்ளான்படி நேராக ‘உட்லண்ட் வெஜ் ரெஸ்ட்டாரெண்டில் டின்னர்.நன்றாக இருந்தது. ரூமுக்கு வந்து நல்ல தூக்கம். போன பத்து நாளும் வெங்கட்,அருமையாக ஒரு காரியம் செய்தார்) நாள் முழுதும் எடுத்த போட்டோஸ் உள்ள ‘சிப்’பை லேப் டாப்பில் ஸ்டோர் பண்ணிவிட்டு, எம்ட்டி ‘சிப்’பை போட்டு,கேமராவை சார்ஜிலும் போட்டு விடுவார்.இதனால் போன பத்து நாளும்,எங்குமே ‘சார்ஜ் போய்விட்டதே,’சிப்’புல்லாகிவிட்டதே ,இனி போட்டோ எடுக்க முடியாதே’ என்ற ஆதங்கமே வரவில்லை. பயணம் செல்லும் போது ஹஸ்பண்ட்கள் கவனத்திற்கு !!

கடைசியா ஹாரி பாட்டர்-போர்பிடேன் பயணம். விஜார்டிங் வேர்ல்ட் , வாழ்க்கையில் ஒருமுறையாவது, பார்க்க,த்ரில்லை அனுபவிக்க வேண்டிய ஒன்று.நான் சொல்வதைவிட,போய் பார்த்து அனுபவியுங்கள்.

இரண்டாம் நாள் கல்ஃபோர்னியா அனுபவம்.. தொடரும்..

– ஷீலா ரமணன்,டெக்சாஸ்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!