பிரேசில்: சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு 350 மில்லியன் டாலர் அபராதம்! - VanakamIndia

பிரேசில்: சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு 350 மில்லியன் டாலர் அபராதம்!

samarco

 

பிரேசில் நாட்டில் மிக மோசமான சுற்றுச் சூழல் பேரழிவு ஏற்படக் காரணமான இரு நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக 350 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் சமார்க்கு சுரங்கத் திட்டத்தில் ஏற்பட்ட கழிவுகள் கடந்த நவம்பர் மாதம், மில்லியன் கணக்கான கியூபிக் மீட்டர் மாசுபட்ட தண்ணீர் மற்றும் மண் கலந்த கழிவு, இரும்பு தாது சுரங்கத்தில் இருந்த அணையின் உடைப்பு வழியாக வெள்ளமாக சென்று சேர்ந்தது. இதில், குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

முதல் கட்டமாக, பி எச்.பி. பில்லிட்டன் (BHP Billiton) மற்றும் பிரேசில் நாட்டு நிறுவனம் வேல் (Vale), ஆகிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இந்தப் பணம் கழிவுகளை அகற்றும் ஆயத்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

சமார்க்கோ சுரங்கத்தில் இருந்து வெளியேறிய மீதமுள்ள கழிவுகளை, தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களை அடுத்த ஆறு மாதத்தில், அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

English Summery: 

Brazilian iron ore mining joint venture Samarco Mineração SA and its controllers Vale SA (VALE5.SA) and BHP Billiton Ltd BTL.L have 30 days to make a deposit of 1.2 billion reais ($354 million) to fund preparatory measures after last year’s dam disaster, Vale said on Friday.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!