மகாராஷ்ட்ராவில் பாஜக அமைச்சரின் 50 ஆயிரம் கோடி ஊழல்... கூட்டணிக்கட்சி குற்றச்சாட்டு..! - VanakamIndia

மகாராஷ்ட்ராவில் பாஜக அமைச்சரின் 50 ஆயிரம் கோடி ஊழல்… கூட்டணிக்கட்சி குற்றச்சாட்டு..!

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் முழுவதுமாக ஒழிக்கப்படும், மாநில கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆள்வதால்தான் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று காவி கட்சியை சேர்ந்தவர்களும் அவர்களுடைய அனுதாபிகளும் சொல்லி வந்தார்கள். அதுவும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மத்தியிலும் மாநிலத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் துளி கூட லஞ்சம் இல்லை என்று பெருமையோடு சொல்லி வந்தார்கள்.

பொய் சொல்வதைக் கூட பெருமையாக சொல்வதற்கு ஒருவித சொரணையற்ற தன்மை வேண்டும். இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள். இங்கே பா.ஜ. ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தில் மாநிலமே துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. அதுவும் பா.ஜ க வைச் சேர்ந்த வீட்டுவசதி துறை அமைச்சர் 50 ஆயிரம் கோடி ஊழலில் சம்பாதித்துவிட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சொல்லவில்லை. மாநில அரசில் அங்கம் வகிக்கும் சிவ சேனா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது.

அந்த அமைச்சர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பெரிய அளவில் போராடி வருகிறார்கள். அனைத்து கட்சிகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள், வழக்கம் போல் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி தான் இதை செய்தது என்று திசை திருப்பி வருகிறது. உண்மையிலே காங்கிரஸ் அரசு தான் அந்த தவறை செய்திருந்தாலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் சீர் செய்திருக்கலாமே.

இப்படி நாம் கேள்விகள் கேட்டால், எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தை மிகுந்த தீரத்துடன் கையாளும் போது, நீங்கள் 50 ஆயிரம் கோடிகளை பற்றி பேசுகிறீர்களே. நீங்கள் தேசத் துரோகி என்று சொல்லி திசைதிருப்பும் வேலையை பா.ஜ.க செய்கிறது.

லஞ்சம் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மகாநகரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை தரப்படுத்தினால், ஐந்தில், நால்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

ஆட்சியும் ஒழுங்காக இல்லை, லஞ்ச லாவணியமும் அதிகமாக இருக்கிறது. பிறகு எப்படி பா.ஜ வை “Party with a Difference” என்று விளம்பரப் படுத்துகிறார்கள்!

– சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *