எம்.. ஓ… டி… ஐ ‘மோடி’ – பாஜக ஆட்சியின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம்! - VanakamIndia

எம்.. ஓ… டி… ஐ ‘மோடி’ – பாஜக ஆட்சியின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம்!

குவாஹாத்தி: புதிய இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் முன்வந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த்துள்ளார்.

அகில இந்திய மருத்துவ கழகத்தின் புதிய கட்டிடத்தை குவாஹாத்தியில் திறந்து வைத்து பிரதமர் பேசினார். அப்போது, அடுத்த ஐந்தாண்டுகளில் நமது நாட்டை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல நாம் அனைவரும் சூளுரைப்போம் என கூறினார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பாஜக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளதாகவும், பிற பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) வளர்ச்சிக்க்காக அதிக முயற்சிஅள் எடுத்து வருவதாகவும் கூறினார்.

பினாமி நிலங்களை ஒழிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பினாமி சட்டட்தை நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டார். அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பினாமி சட்டம் 1988ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும் , அமல்படுத்தப்படாமல் 28 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. 2015ம் ஆண்டு பினாமி சட்டத் திருத்தம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

ஸ்வாச் பாரத் திட்டத்தின் வெற்றியையும் , சுத்தமான இந்தியாவுக்காக மீடியாவின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்த்தார்.
அஸ்ஸாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்துM O D I ( Making of Developed India) திருவிழா வை தொடங்கியுள்ளார்.

மூன்றாண்டு பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் திருவிழா போல் நடத்தப்படும் விளம்பர உத்திக்கு M O D I என்று பெயரிட்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் பாஜக தலைவர் தமிழிசை, பி ஓ ஜி ஏ என் போகன் என்ற பாடலை மாத்தி ‘எம் ஓ டி ஐ’ மோடின்னு பாடினாலும் பாடுவாங்களோ?

English Summary:

BJP is celebrating three year achievements in central government as a pan festival in the name of M O D I ( Making of Developed India).

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!