குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக முன்னிலை! - VanakamIndia

குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக முன்னிலை!

டெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இரு மாநிலங்களிலுமே பாரதீய ஜனதா முன்னிலையில் உள்ளது.

ஆனால் குஜராத்தில் பாஜக வசமிருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க-97 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார். குஜராத் மேசானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை வகிக்கிறார்.

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

68 தொகுதிகளை கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா கூட்டணிகள் 41 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

இதனால், பங்குச் சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!