பார்டர்ல மட்டும்தான் தேசபக்தியா? ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு அநீதியா?. - VanakamIndia

பார்டர்ல மட்டும்தான் தேசபக்தியா? ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு அநீதியா?.


பாஜக அரசின் குளறுபடிகளை சுட்டிக்காட்டி எதை எழுதினாலும் அங்கே பார்டர்ல… என்று ஆரம்பிப்பது அல்லது தேசபக்தி என்ற கூக்குரல் எழுப்புவது சங்கிகளின் வழக்கம். ஏதோ ஒட்டுமொத்த தேசபக்திக்கும் இவர்கள்தான் கான்டிராக்ட் எடுத்ததுபோல.

1971இல் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. அந்தப் போருக்குப் பிறகு, இந்திய அரசு ஒரு முடிவு செய்கிறது. போர்க்களத்தில் உயிரிழந்த, காணாமல் போன, ஊனமுற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு செலுத்தும்.

அதாவது, கல்விக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், யூனிபார்ம் செலவு, புத்தகங்களுக்கான செலவு ஆகியவை அவர்களுககுத் தரப்படும். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை மதிப்போம் என்பதன் அடையாளம் அது.

சங்கிகளின் அரசு, இந்தக் குழந்தைகளுக்கான உதவித் தொகையை மாதத்துக்கு அதிகபட்சம் 10,000 ரூபாய் என குறைத்துவிட்டது. இந்த உச்சவரம்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் கடற்படைத் தளபதி சுனில் லன்பா.

ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து அரசும் பாஜகவினரும் பேசுவதெல்லாம் வெறும் அரசியல் நாடகம் அல்லாமல் வேறென்ன?

– புதியவன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!