ரஜினி அரசியல் : மீண்டும் படுக்கையறை பற்றி பேசும் பாரதிராஜாவுக்கு இனவெறியா? சாதி வெறியா? - VanakamIndia

ரஜினி அரசியல் : மீண்டும் படுக்கையறை பற்றி பேசும் பாரதிராஜாவுக்கு இனவெறியா? சாதி வெறியா?

சென்னை: தமிழ் சினிமாவை கிராமத்திற்கு எடுத்து சென்றவர், எதார்த்த வாழ்க்கையை சினிமாவில் படம்பிடித்துக் காட்டியவர் என்று தமிழ்த் திரையுலகின் முக்கிய பிதாமகனான பாரதி ராஜாவுக்கு என்னதான் ஆச்சு?

ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் வகையில் படுக்கை அறை கதை பேசி தன்னுடைய மரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறார். ரஜினி வேறு இனத்தவராம். தற்போது கமல் ஹாசனையும் ரஜினியுடன் சேர்த்துக் கொண்டு, இருவரும் தமிழக முதல்வராக வரக்கூடாது என்கிறார் பாரதிராஜா.

ரஜினி, கமல் இருவரும் நடித்து இருக்காவிட்டால் பதினாறு வயதினிலே என்ற படமும் வந்திருக்காது. பாரதிராஜா என்ற இயக்குனரும் வந்திருக்க மாட்டார். சின்னச்சாமியாகவே , முனிசிபல் அலுவலகத்தில் கொசு மருந்து அடிக்கும் ஆபீசராகவோ அல்லது வேறு ஏதாவது துறையிலோதான் அவர் வாழ்க்கை தொடர்ந்திருக்கக் கூடும்

16 வயதினிலே படத்திற்குப் பிறகு சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என்று கமல் ஹாசனை மீண்டும் இயக்கினார் பாரதிராஜா. ஆனால் ரஜினியின் கால்ஷீட் அவருக்கு கிடைக்கவே இல்லை. மணிவண்ணனின் சிபாரிசில்தான் ரஜினி, பாரதிராஜாவின் கொடி பறக்குது படத்திற்கு கால்ஷீட் கொடுத்தார். கதை உட்பட எந்த கேள்வியும் கேட்காமல் நடித்துக் கொடுத்தார்.

அந்தப் பட விளம்பரத்தில் ‘முதல் மரியாதை படத்தில் சிவாஜி என்ற தென்றலுடன் நந்தவனத்தை சுற்றி வந்த திருப்தி. கொடி பறக்குது படத்தில், ஒரு புயலின் கையைப் பிடித்துக் கொண்டு உலகை சுற்றி வந்த திருப்தி’ என்று பாரதிராஜா கூறியிருந்தார். ரஜினியே முகம் சுளிக்கும் அளவுக்கு சிவாஜியைக் குறைத்தும், ரஜினியை தூக்கிப் பிடித்தும் அவ்வாறு பேசி இருந்தார் பாரதிராஜா.

அதாவது, தேவைப்படும்போது ரஜினியை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார். சமீபத்தில் கூட, தனது பிலிம் இன்ஸ்டிடியூட்டை திறக்க ரஜினியைத்தான் அழைத்து இருந்தார். உடன் கமல் ஹாசனும் வந்திருந்தார்.

கேட்டால் அவர்கள் இவர் வீட்டுத் திண்ணை வரை வரலாமாம். படுக்கை அறைக்கு வரக்கூடாதாம்? கமல் ஹாசனுக்கும் திண்ணை வரைதான் இடம் என்றால் அவர் பிராமண சாதி என்பதாலா? பிராமணர்கள், தமிழர் இல்லை என்று பாரதிராஜா மறுக்கிறாரா? இது இனவெறி தாண்டிய சாதி வெறி அல்லவா!

பேட்டி கண்ட பாண்டே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த போது, நீங்கள் திண்ணையில்தான் தூங்கினீர்களா என்று கிடுக்கிப் பிடி போட்ட போது, பேந்தப் பேந்த முழிக்கத்தான் முடிந்தது பாரதிராஜாவுக்கு.

நாளை ரஜினி தமிழக முதல்வராகும் போது, ஏதாவது சலுகை கேட்டு வரிசையில் இதே பாரதிராஜா நிற்காமல் இருந்தால் சரி!

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!