ArunJaitley's 2018-19 Budget

பொருளாதார பலம் வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது – அருண் ஜெட்லி!

img src=”http://vanakamindia.com/wp-content/uploads/2018/02/Arun-je.jpg” alt=”” width=”900″ height=”600″ class=”aligncenter size-full wp-image-25029″ />

டெல்லி: நலிந்தோருக்கு நன்மை செய்யும் விதமாக இந்த பட்ஜெட் அமையும் எ<ன மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய மத்திய அரசின் முழுமையான இறுதி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துவிட்டு அருண்ஜெட்லில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். இந்த பட்ஜெட் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு பொறுப்பேற்கும் போது நிர்வாக சீர்கேட்டால் பொருளாதாரம் சீரழிந்திருந்தது. ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி முறைகளால் வரி செலுத்தும் முறை எளிதாக்கப்பட்டு இருக்கிறது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெறும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் 2018-19-ம் ஆண்டில் ஏற்றுமதி 15% அதிகரித்துள்ளது நேர்மையான அரசை வெளிப்படுத்துவோம். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக இந்தியா விளங்குகிறது. 7.5% என்ற பொருளாதார வளர்ச்சியை 3 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளோம். நலிந்தோருக்கு நன்மை செய்யும் விதமாக இந்த பட்ஜெட் அமையும். நாங்கள் பதவியேற்கும்போது நாடு ஊழலில் மூழ்கி இருந்தது. அரசின் நடவடிக்கையால் நேரடி அந்நிய முதலீடு அதிகமாகியுள்ளது. என்று அவர் பேசி வருகிறார்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!