என் கொள்கைகள் பிடித்தால் ரஜினி எனக்கு ஆதரவு அளிக்கட்டும் - அன்புமணி ராமதாஸ்! - VanakamIndia

என் கொள்கைகள் பிடித்தால் ரஜினி எனக்கு ஆதரவு அளிக்கட்டும் – அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய நடிகர் ரஜினிகாந்த் பாமக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய அன்புமனி ராமதாஸ், ‘ அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டும் மோட்டாருக்கு மூன்று விதமான வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண தொழிலாளர்கள் தான்.

அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பதிலும் தொழிலாளர்கள் தான் அதிகப்படியாக பாதிப்படைகின்றனர். மாட்டிறைச்சியை தடை செய்வதினால் அதிகமாக பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்.

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி, விவ்சாயம், நீட் தேர்வு என அனைத்து பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஒரு திரைப்பட நடிகராலும் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. ரஜினிகாந்த் என்னை ஒரு நல்ல நிர்வாகி என கூறியுள்ளார்.

எனவே, தமிழகத்தில் சிறப்பான நிர்வாக நடைபெற நடிகர் ரஜினிகாந்த் பாமக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!