டெல்லி போராட்டம்.. தமிழக விவசாயிகள் ரயிலில் பயணம்! - VanakamIndia

டெல்லி போராட்டம்.. தமிழக விவசாயிகள் ரயிலில் பயணம்!

 
 
 
சென்னை : நாடு தழுவிய அளவில் விவசாயிகள் பங்கேற்கும் போராட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச விலையுடன் 50 சதவீத லாபம் என்ற இரு கோரிக்கைகளுடன் 184 விவசாய அமைப்புகளைச் சார்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழகத்திலிருந்தும் 36 விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.  தஞ்சாவூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.
 
புறப்படும் முன்பு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்ட முழக்கங்கள் எழுப்பினார்கள். பெண்களும் கலந்து கொண்டார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும்  பச்சைத் துண்டுடன் விவசாயிகள் காணப்பட்டார்கள்.
 
விவசாயிகளுக்கு ஆதரவாக சமூகத் தளங்களில் #Indebted2Farmers, #KisanKiLoot, #KisanMuktiSansad போன்ற ஹேஷ்டேக்குகள் பரவிவருகின்றன. தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய தொடர் போராட்டத்திற்கு செவி கொடுக்காத மத்திய அரசு, 184 விவசாய அமைப்புகளின் போரட்டத்திற்காவது அசைந்து கொடுக்குமா என்று பார்க்கலாம்.
 
– வணக்கம் இந்தியா செய்திகள்

 

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!