கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவு திரட்டும் அமெரிக்கத் தமிழர்கள்! - VanakamIndia

கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவு திரட்டும் அமெரிக்கத் தமிழர்கள்!

#CycloneOkhi_Tamilnadu

Kavitha K Pandian

Voice In Support Of Tamil Nadu Fishermen ~ From Atlantic Coast, USA

Uploaded by Anbu Ramaiyan on 2017-12-11.

ரிச்மண்ட்: ஓகி புயலால கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கப் போராடிவரும் கன்னியாகுமரி மக்களுக்காக அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.

ரிச்மண்ட் நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி, மீனவர்களை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய தூதரகத்தில் மனு அளிக்கவும் கையெழுத்து பெற்று வருகிறார்கள்.

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும், மனித நேயம் உள்ள அனைவரும் இத்தகைய கோரிக்கைகளை வீடியோ மூலம் பதிவு செய்து அரசுக்கு அனுப்புங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முன்னதாக கன்னெக்டிகட் மிடில்டன் நகரில் ஒன்று கூடிய தமிழர்கள், ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும். அரசு துரிதமாக செயல்பட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதே போல் ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ நகரிலும் தமிழர்கள் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினார்கள். இன்று, சனிக்கிழமை வடக்கு கரொலைனா மாநிலத்தின் ராலே நகரில் மீனவர் ஆதரவுக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்னும் பிற அமெரிக்க நகரங்களிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை மீனவர்களுக்காக திரட்டி வருகிறார்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!