அமெரிக்கத் தமிழ்க் குழந்தையின் ஆச்சரியப்படுத்தும் கலை ஆர்வம்! - VanakamIndia

அமெரிக்கத் தமிழ்க் குழந்தையின் ஆச்சரியப்படுத்தும் கலை ஆர்வம்!

சான் அண்டோனியோ: அமெரிக்காவில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ் மொழியை பயின்று வருவது அனைவரும் அறிந்ததே!.

அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க சூழலில் மேலும் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தங்களுக்கு விருப்பமான துறைகளில் பயிற்சி பெற்றுக்கொள்ள பெற்றோர்களும் ஊக்கமளிக்கிறார்கள். நடனம், இசை என பயின்று வரும் மாணவர்களுக்கு மத்தியில், ஓவியம், குதிரை ஓட்டம், கூடைப் பந்து என பல துறைகளிலும் சிறுவயது முதலாகவே பயிற்சி பெறுகிறார்கள்.

சான் அண்டோனியாவில் வசிக்கும் ஷ்ருதி என்ற 9 வயதுப் பெண்ணின் ஓவியங்கள் நம்முடைய கவனத்திற்கு வந்தது. ஐந்து வயது முதலாகவே நுணுக்கமாக வரைந்து வருகிறார். அந்த ஓவியங்கள் பற்றி கேட்டதும், என்னென்ன ஓவியம், எப்போது வரைந்தார், என்ன பெயிண்ட், ப்ரஷ் மற்றும் கலர்கள் உபயோகித்தார் என்று தனித்தனியாக எழுதித் தந்து விட்டார். கையெழுத்தும் முத்து முத்தாக ஓவியம் போலவே இருக்கிறது.

நீங்களே ஓவியங்களையும் அதைப் பற்றிய விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!