ட்ரம்புக்கு பின்னடைவு.. வர்ஜீனியா, நியூஜெர்ஸி கவர்னர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி - VanakamIndia

ட்ரம்புக்கு பின்னடைவு.. வர்ஜீனியா, நியூஜெர்ஸி கவர்னர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி

வாஷிங்டன்(யு.எஸ்) கவர்னர் தேர்தல்களில் நியூஜெர்ஸி மற்றும் வர்ஜீனியா மாநிலங்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்துள்ளது.

வர்ஜீனியாவில் ரல்ஃப் நார்தம் கவர்னராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அங்கு ஜனநாயகக் கட்சி கவர்னர் டெர்ரி மெக்கலிஃப் ஆட்சி செய்து வந்தார். நாட்டிலேயே குறைந்த பட்ச வேலையில்லாதவர்கள் கொண்ட மாநிலமாக இருந்தது. அதற்கு பரிசு தருவது போல் மக்கள் மீண்டும் ஜனநாயகக் கட்சி கவர்னரை தேர்ந்தெடுத்துள்ளனர். தலைநகர் வாஷிங்டன் டிசியை ஒட்டியுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ ஜெர்ஸியில் குடியரசுக் கட்சியின் கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டி ஆட்சி செய்து வந்தார். அதிபர் ட்ரம்பின் தீவிர விசுவாசியான அவருக்கு 8 ஆண்டுகள் பதிவிக் காலம் முடிவடைந்து விட்டது. அங்கு ஜனநாயகக் கட்சியின் ஃபில் மர்பி கவர்னராக வெற்றி பெற்றுள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜனநாயகக் கட்சி நியூஜெர்ஸியில் கொடி நாட்டியுள்ளார்கள்.

நியூயார்க் மாநகர மேயராக ஜனநாயகக் கட்சியின் பில் தே ப்ளாசியோ வெற்றிபெற்றுள்ளார். இன்னும் பல மாநகர மேயர் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. வாஷிங்டன் செனட் தேர்தல் முடிவும் வர உள்ளது.

இரு பெரும் மாநிலங்களின் கவர்னர் தேர்தல் தோல்வி அதிபர் ட்ரம்புக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைத்தேர்தலில் வெற்று பெற்று செனட் மற்று உறுப்பினர்க அவையை கைப்பற்றுவோம் என்று ஜனநாயகக் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!