அமெரிக்காவில் வாகன விபத்து: சம்பவ இடத்திலே 12 பேர் பலி! - VanakamIndia

அமெரிக்காவில் வாகன விபத்து: சம்பவ இடத்திலே 12 பேர் பலி!


நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தனியார் டிரக் ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணித்தவர்களில் சுமார் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும், ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மொத்தமாக 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் எனவும் போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!