America based short film director questions Rajini haters

இஷ்டம்னா சப்போர்ட் பண்ணுங்க… இல்ல எதிர்ப்பு காட்டுங்க.. வரவே கூடாதுன்னு சொன்னா எப்படி?

டல்லாஸ்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்பிற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் ரஜினி பற்றிய செய்திகளும், அவதூறுகளும் ஒருங்கே கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவிலும் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிக்கின்றன. டல்லாஸில் வசிக்கும் தமிழ் குறும்பட இயக்குvர் விருதை சரவணன், ரஜினிக்கு ஆதரவு கொடுங்கள் அல்லது எதிர்ப்பு தெரிவியுங்கள், அரசியலுக்கே வரக்கூடாது என்பது எப்படி நியாயமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் விருதை சரவணன் கூறியுள்ளதாவது

“அன்புள்ள நண்பர்களுக்கு, அமெரிக்காவிலிருந்து விருதை சரவணன்!!
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு ரசிகனாய் என் கருத்து! நான் “அவர் ரசிகன்” என தெரிவிக்க எடுத்துக் கொண்ட காலம் பல வருடங்கள்! கிட்டத்தட்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் “சிவாஜி” திரைப்படத்திற்கு பின்னர்தான் நான் ஒரு “ரஜினி” ரசிகன் என வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தேன்!

நான் இதுவரை ரஜினியை நேரில் பார்த்தது இல்லை! அவரிடம் காசு, பணம் வாங்கியது இல்லை! நான் அவர் மூலம் நேரிடையாக எந்த பலன் அடைந்ததும் இல்லை! ஆனாலும் அவர் வாழ்க்கை மூலம், *எளிமை*, மற்றும் *மனிதம்* கற்றுக்கொள்ள, இன்னமும் முயன்று வருகிறேன்! அவருக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த காலத்திலிருந்து, ஒரு தகப்பனாக, அவர் நடவடிக்கைகள் மற்றும் தன்னை நம்பியவர்கள் மோசம் போகக்கூடாது என இழப்பினை தானே ஈடு செய்ய முயற்சிக்கும் மனப்பாங்கு இவை என்னைக் கவர்ந்தன!

என் அக்கா மகனை மடியில் வைத்து “பாட்ஷா” பார்த்த காலத்திலும் சரி, என் மகனை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு “கபாலி” பார்த்த காலத்திலும் சரி. அவர்களுக்கு சரி சமமாகவே, அவரை ரசித்து இருக்கிறேன் என்பதே மனதிற்கு சரியாகப் படுகிறது!! நம் சொந்தக்காரர் ஒருவர் உடல் நலம் இல்லாது போனால், நாம் அவருக்காக இறைவனிடம் வேண்டுவோம், அல்லவா? அது போலதான் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது அவர் நலம் பேணி வேண்டினேன், என நினைத்தேன்! ஆனா அதுக்கும் மேல!

எனவே முதலில் என்னை ஒரு ரஜினி ரசிகனாக உலகிற்கு “அதிகாரப் பூர்வமாக” அவரின் “ரஜினி மன்றம்” இணைய தளத்தில் பதிவு செய்து பின்னர், இதனை எழுதுகிறேன்!

தனி மனிதன் ஒருவன், பொறுத்திருந்து, பொறுத்திருந்து பார்த்து பின்னர் தானாக முன் வந்து “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! நான் உங்கள் வாழ்க்கையில் நல்ல வழியில், என்னால் முடிந்தவரை ஒரு மாற்றம் உண்டு பண்ணுகிறேன்!” எனக் கேட்பவனிடம், உங்களுக்கு விருப்பம் இருந்தால், ஆதரவு கொடுங்கள்.

அப்படி இல்லையெனில் நீங்கள் விரும்பும் கட்சிக்கோ அல்லது சமூகத்தைச் சார்ந்த கட்சியினருக்கோ, உங்கள் ஆதரவை நியாயமான முறையில் தெரியப்படுத்துங்கள். அதற்கு மாறாக நீங்கள் அரசியலுக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றால், அது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் நம் ஜனநாயக நாட்டில்? சிந்தித்து செயல்படுவீர். உங்கள் மனசாட்சி உதவியுடன்.

ஒரு கலைஞனுக்கு, ஒரு ரசிகனாக என்னால் இயன்ற சிறு உதவி!” – இவ்வாறு விருதை சரவணன் தெரிவித்துள்ளார். ஐடி துறையில் வேலை என்றாலும் அமெரிக்காவில் தமிழர்கள் வாழ்க்கை பற்றிய குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும் புதிய குறும்படங்களும் இயக்கி வருகிறார் சரவணன். வானொலி அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!