ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி! - VanakamIndia

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!

maran-brothers

டெல்லி: 2ஜி வழக்குடன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சேர்த்து விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2ஜி வழக்குடன் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஆனால், 2ஜி வழக்குக்கும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பது தயாநிதி – கலாநிதி மாறன் தரப்பு வாதம்.

எனவே, 2ஜி வழக்குடன் ஏர்செல் – மேக்சிஸ் வழக்குக்கு தொடர்பு இல்லை என்பதால், அதனை வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மாறன் தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு 2ஜி வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனவும், ஏர்செல் – மேக்சிஸ் வழக்கை தில்லி சிபிஐ நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டு, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Aircel-Maxis case: Special 2G court dismisses Maran brothers’ application challenging its jurisdiction

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!