'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை - VanakamIndia

‘சரவணன் மீனாட்சி’ நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை: நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்தவர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயன்தான் இவர் கணவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமானதிலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெகுநேரமாகியும் விடுதியில் அவரது அறை திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வந்து பார்த்த போது, வாயில் நுரைதள்ளிய படி கார்த்திகேயன் பிணமாகக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!