முன்னாள் அமைச்சர் நடிகர் ’மாவீரன்’ நெப்போலியன் பிறந்த நாள்.. மலையாளப் படப்பிடிப்பில் கேக் வெட்டினார் - VanakamIndia

முன்னாள் அமைச்சர் நடிகர் ’மாவீரன்’ நெப்போலியன் பிறந்த நாள்.. மலையாளப் படப்பிடிப்பில் கேக் வெட்டினார்

நெப்போலியன் பிறந்தநாள் வாழ்த்து

டிசம்பர் 2ம் தேதி பிறந்தநாள் காணும் மாவீரன் நெப்போலியனுக்கு அவருடைய ஜீவன் மற்றும் மயோபதி குழும ஊழியர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து வீடியோ/

ராமக்கல் மேடு: முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் பிறந்த நாளை ’அய் நா’ மலையாளப் படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடினார். தனது மகனுக்காக அரசியல் மற்றும் சினிமாவை விட்டு அமெரிக்காவில் குடியேறினார் நெப்போலியன்.

தற்போது முக்கியமான கதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டும் நடித்துக் கொடுக்க அமெரிக்காவிலிருந்து வந்து செல்கிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.

அய் நா மலையாளப் படத்தில் நடிப்பதற்காக வந்துள்ள நெப்போலியன் , கேரளா இடுக்கி மாவட்டம் ராமக்கல் மேடு பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்தப் படத்தை சுந்தர் எல்லர் இயக்குகிறார். அப்துல் வதூத் கதை எழுதி, தயாரிக்கிறார். கதாநாயகனாக நெப்போலியன், உடன் சீமா மற்றும் சுவாஸிகா நடிக்கிறார்கள். ’காலம் எல்லாம் காதல் வாழ்க’ உள்ளிட்ட படங்களில் நடித்த கௌசல்யாவும் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இன்று டிசம்பர் 2ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் நெப்போலியனுக்கு ‘அய் நா’ படப்பிடிப்புக் குழுவினர், முன்னதாகவே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.

அய் நா படப்பிடிப்புக் குழுவினருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அருமையான லோகேஷன், அன்பான குழுவினர் என்று வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நெப்போலியன். கேரளாவில் எல்லோரும் தன்னை ’முண்டக்கல் சேகரன்’ என்று இன்னும் அழைக்கிறார்கள் அது பெருமைக்குரியதாகும் என்றும் கூறினார்.

மோகன் லால் இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் ஆண்டு வெளியான ராவணபிரபு படத்தில் முண்டக்கல் சேகரன் என்ற வில்லன் கேரக்டரில் நெப்போலியன் நடித்திருந்தார்.

நெப்போலியனின் ஜீவன் மற்றும் மயோபதி குழும ஊழியர்களும் சிறப்பு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறுவயது முதல் தற்போது வரையிலான முக்கிய படங்கள் நிகழ்வுகளை புகைப்படங்களாக தொகுத்து அந்த வீடியோ தயாரிக்கப் பட்டுள்ளது.

மாவீரன் நெப்போலியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!