Actor Jeeva says Let change begin from us

மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும்… பஸ் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு உதவுங்கள் காவலர்களே – நடிகர் ஜீவா அழைப்பு

சென்னை : அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

திடீர் வேலை நிறுத்தத்தினால் அலுவலகம் சென்று வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர். உடனடியாக அவதியுற்று வரும் பொதுமக்களுக்கு உதவுங்கள் என்று ரஜினி ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

“பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக அவதிப்படும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு நாம் பயணிக்கும் ஆட்டோ, கார், டூவீலர் அனைத்திலும் லிப்ட் கொடுத்து உதவலாம்..

மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும்” என்று நடிகர் ஜீவா ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!