ஆதார் இணைப்பிற்கு மார்ச்-31 வரை கெடு..?? - VanakamIndia

ஆதார் இணைப்பிற்கு மார்ச்-31 வரை கெடு..??

அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த வருடம் 2018 மார்ச் 31 வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு திட்டங்களின் பயனை பெறுவதற்காக, ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டில்லி அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்த பிறகு, ஆதார் இணைப்பு தொடர்பான மனுக்களை விசாரிக்கிறோம்’ என்றனர். மேலும், ‘டில்லி, ஒரு மாநிலம் அல்ல என்றும், அதன் நிர்வாக தலைவர், துணைநிலை கவர்னர் என்றும், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது., என்றனர்.

முன்னதாக, அக்., 30ல், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும்’ என, கூறியிருந்தது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!