பத்திரிகையாளர்னா கொலை செய்ய லைசென்சா கொடுத்திருக்காங்க? - VanakamIndia

பத்திரிகையாளர்னா கொலை செய்ய லைசென்சா கொடுத்திருக்காங்க?

– கதிர்

அம்பது வருசம் ஜேனலிஸ்டா இருந்துட்டு சைலன்டா செத்து போன அறிவாளிகள் உண்டு.

டீவி வந்தப்றம் எல்லாம் சீப்பா ஆயிருச்சு. கைல மைக் புடிக்க தெரிஞ்சா நீ ஒரு ஜேனலிஸ்ட். ஒரு புண்ணாக்கும் தெரிஞ்சுக்க அவசியமில்ல. நீட்ற மைக்ல வார்த்தைய கொட்றவன் பொறுப்பு அது.

நல்லகண்ணுட்ட மைக்க நீட்டி, நீங்க எந்த கட்சி, அதுல எவ்ள நாளா இருக்கீங்க, எதாவது போஸ்ட்ல இருக்கீங்களா..னு எங்க நேயர்களுக்காக ஒரு இன்ட்ரோ குடுத்துட்றீங்களா, ப்லீஸ்..னு கேக்க முடியுது.

எஸ்.எம்.கிருஷ்ணா வரும்போது, சென்னைக்கு ஏன் கிருஷ்ணா நீர் தர மாட்டேங்றீங்கனு கேக்க முடியுது. இதெல்லாத்தயும் விட அக்ரமம், ஜேனலிஸ்ட்ங்ற பந்தால ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் விஐபிகள கழுவி ஊத்றது. பத்தாயிரம் பேர் ஃபாலோ பண்றாங்கன்னா என்ன வேணா ட்வீட் பண்ணலாமா.

விமர்சனம் செய். கேலி கிண்டல் ஓகே. திட்னாகூட தப்பில்ல. ஆனா.. பி கேர்ஃபுல் வித் வேட்ஸ்.

தமிழ்ல சொன்னா கெட்ட வார்த்தையா இருக்றத எல்லாம் இங்லீஷ்ல சொன்னா அருள் வாக்கா? அந்த வார்த்தைகள பயன்படுத்தினாதான் உங்க இங்லீஸ் புலம ஊருக்கு தெரியும்னு அர்த்தமா?

’உம் மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கு’ன்னு எந்த மொழில சொன்னாலும் அவனுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

’இத விட அவர் பாலியல் தொழில் நடத்த போகலாம்னு சொல்றியா.. சேச்சே, அப்டி பேசுறது தப்பு..’னு ஒரு தலைவர இங்லீஸ்ல நக்கலடிச்சா தொண்டனுக்கு புரியாம போய்றாது.

ஒரு படம் ரிலீசாகும்போது அந்த ஹீரோவ முடிஞ்சவரைக்கும் மட்டந்தட்டி மீம்ஸ் போட்றது தமிழன் பண்பாடு. அந்த கூட்டத்தோட ஆட்டய போட்ருந்தா எவனும் கவனிச்சிருக்க மாட்டான்.

அந்த படத்தால ஏற்பட்ட காயம் குணமாகி ரசிகன்ஸ் மாமூல் நிலைக்கு வந்திருக்கும்போது குச்சியால குத்துறது என்ன நியாயம். அதுவும் வேற ஒரு ஹீரோவ நையாண்டி பண்ண இந்தாள இழுக்றது ஓவர்ல்ல.

ஆக்சுவலா இது பெரிய குத்தம் இல்ல. ஆனா இப்ப கிடைக்கிற அர்ச்சனை இதுக்கானது இல்ல. இதுவரை செஞ்சதுக்குன்னு வச்சுக்கலாம்.

இவ்வளவு வல்கராவா, இவ்வளவு கேவலமாவா..னு கேக்கலாம். வாட் டு டூ? அவங்க லெவலுக்கு அவங்க நடந்துக்றாங்க.

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு ஹீரோ அட்வைஸ் பண்ண வெண்டாமா, அவங்கள கண்டிக்க வேண்டாமானு வேற சில பேருக்கு ஆதங்கம்.
அடிமடிலயே கை வைக்றதுன்னா இதான்.

நாடு பூராவும் கொடூரமான சில விஷயங்கள செஞ்சுகிட்டு திரியுது ஒரு கூட்டம். நாட்டோட தலைவரே அவங்கள கண்டிக்கிறது கிடையாது. கொடூரமான விசயங்கள யாரும் செய்யக் கூடாதுனு ஆத்திசூடியாட்டம் அட்வைஸ் பண்றதோட நிறுத்திக்றாரு.

அவர் நிலைமையே அப்டீன்னா, பாவம்ல நம்ம ஹீரோஸ். பல்லக்குல போறவன் பல்லக்கு தூக்கிகள உதைச்சா என்னாகும்.
ஜேனலிஸ்ட்னா யார வேணா என்ன வேணா சொல்லலாம், ஒருத்தராலும் நம்ம முடியக்கூட…. அப்டீனு அர்த்தமில்ல. ஜேனலிஸ்ட்ங்க என்ன பேசுறாங்க, எப்டி நடந்துக்றாங்கனு ஜனங்க கவனிக்றாங்க. முன் எப்போதையும்விட கூர்மையா.

மனிதர்களை இணைக்க எழுதுங்கள். பிரிக்க அல்ல. இதற்கு மேலும் பிரிவினைகளை தாங்கும் சக்தி இந்த மண்ணுக்கு கிடையாது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!