எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இது...! - VanakamIndia

எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இது…!

barter-system-demonetisation-lead

தற்காக இந்த மக்கள் அமைதியாகக் கடந்து போகிறார்கள் அல்லது வங்கி, ஏடிஎம் வாசலில் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு பெரிய முட்டாள்தனத்தைச் செய்துவிட்டு, அதைச் சரிகட்ட தினம்தோறும் புதுப்புது அதிர்ச்சி அறிவிப்புகளை விட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கோமாளியின் நிர்வாகம். மன நிலை பிறழ்ந்த அல்லது வக்கிரம் பிடித்த ஒரு நிர்வாகியின் தான்தோன்றித்தனங்கள் இவை. பொருளாதாரத்துக்கும் இந்த கோமாளித்தனங்களும் இம்மியளவுக்கும் சம்பந்தமில்லை.

பண ஒழிப்பு என்ற பெயலில் செயற்கைப் பணத் தட்டுப்பாட்டை உருவாக்கி மக்களின் கோவணத்தையும் உருவி அம்மணமாகத் தெருவில் அலையவிட்ட அவலம், அடுத்து உடல் உறுப்புகளையே அபகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

ஆதார் வேண்டாம் என்கிறது நீதிமன்றம். அனைத்துக்கும் ஆதார் வேண்டும் என்கிறது கோமாளி நிர்வாகம்.

ஆரம்பத்தில் மக்களுக்கு ஆதரவாக நின்ற நீதிமன்றங்கள் / நீதிபதிகள் இப்போது ஒத்திப் போடல்களில் மும்முரம் காட்டுகின்றன(ர்). ‘தேசிய கீதத்துக்கு நாங்கள் நிற்கமாட்டோம்.. சினிமா பார்ப்பவர்கள் மட்டும் எழுந்து நிற்கட்டும்’ என்கின்றன(ர்). அட, குறைந்தபட்சம் அரசு அலுவலர்கள் கூட எழுந்து நிற்க மாட்டார்களாம். சினிமாக்காரன் / சினிமா பார்ப்பவன் அவ்வளவு பெரிய குற்றவாளியா? (மத்தவனுக்கெல்லாம் இல்லாத கட்டாயம் சினிமாக்காரன் / சினிமா பார்ப்பவனுக்கு மட்டும் எதற்கு? தேச பக்தியை அவன் மட்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன?)

இன்று நாட்டின் தலைமையே கிறுக்குத் தனத்தின் உச்சத்தில் உள்ளது. பிச்சைக்காரன் கூட கார்டு தேய்க்கும் எந்திரம் வைத்துக் கொண்டு பிச்சையெடுப்பதாகவும், டெபிட் கார்டு வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூசாமல் புளுகிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரதமர்.

பிச்சைக்காரனே இல்லாத நாடு உயர்ந்ததா… ஸ்வைப் மிஷிநில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் மலிந்த நாடு உயர்ந்ததா?

மெல்ல மெல்ல கற்காலத்துக்கே அழைத்துப் போகும் சாதனையைத்தான் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.

இத்தனைக் கேவலங்களையும் பார்த்த பிறகும் சின்ன எதிர்ப்பைக் கூடக் காட்ட திராணி இல்லையா மக்களுக்கு? இது என்ன மாதிரி தேசப் பற்று… புரியவில்லை!

-முதன்மை ஆசிரியர்

வணக்கம்இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!