அர்ஜன்டைனா: 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை கண்டெடுப்பு! - VanakamIndia

அர்ஜன்டைனா: 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை கண்டெடுப்பு!

அஃகா மகுவா: அர்ஜன்டைனா நாட்டின் பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பகுதியில் உள்ள அஃகா மகுவா தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டைகள் அனைத்தும் இன்னமும் உயிர்க் கருக்களுடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு வசிக்கும் மக்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகள் அங்குள்ள முட்டைகள் அனைத்தையும் மீட்டுள்ளனர்.

அஃகா மகுவோ பகுதியில் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டும் உலகின் மிகப்பெரிய ரைனோசரஸின் எலும்புக் கூடுகளும் இப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இப்பகுதியில் அதிகப்படியான மக்கள் வசித்து வருவதால், அவர்களுக்கு மாற்று இடங்களை அறிவித்து அந்த பகுதியில் படிம ஆய்வியல் பூங்கா அமைக்க அர்ஜெண்டினா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மீட்கப்பட்ட முட்டைகள், தோல், பற்கள் என அனைத்தும் உயர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!