பிரபாகரனுக்கு 32... பாலச்சந்திரனுக்கு 20! - VanakamIndia

பிரபாகரனுக்கு 32… பாலச்சந்திரனுக்கு 20!

சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த பிரபாகரன் பற்றிய பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. காரணம், இறுதிப் போரின் இலங்கை ராணுவ தளபதிகளுள் ஒருவரான கமால் குணரத்ன கூறிவரும் முரண்பட்ட கருத்துகள்.

அவர் எழுதிய நந்திக் கடலுக்கான பாதை எனும் புத்தகத்தில் பிரபாகரன், புலிகள், இறுதி யுத்தம் பற்றி வேறுபட்ட விஷயங்களைக் கூறி வருகிறார்.

சேனல் 4 ஊடகம் பிரபாகரனின் 2வது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக தகவல்களை வெளிப்படுத்தியது, அதே சமயம் கமால் குணரத்னவின் படைப்பிரிவின் மூலமாகவே கொல்லப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்தன.

ஆனால் பாலச்சந்திரன் என்ன ஆனார் என்பது எனக்குத் தெரியாது என்று மேஜர் கமால் குணரட்ன அண்மையில் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவர் அரசியல் நோக்குனர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருந்தார். அவரை அத்தகைய விமர்சனங்களுக்கு சிக்க வைத்துள்ள பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கு இன்று 20ஆவது வருட பிறந்த நாள் தினமாகும்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 32வது வருட திருமண நாளும் இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!