2018-19 Central government budget

விவசாயத்தை மேம்படுத்தும் 2018-19 மத்திய பட்ஜெட் – சிறப்பம்சங்கள்!

2018-19 ஆம் ஆண்டிற்கு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அறிவித்தார்.

பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும்

96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசன திட்டத்திற்கு 2,600 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு

பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்

காச நோயாளிகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை

விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை

விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம்

விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்

மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்

ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக பணம் ஈட்ட வகை செய்துள்ளது. விவசாயிகளுக்கு ”அச்சே தின்” வந்து கொண்டுள்ளது. விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!