2017 புத்தாண்டு பலன்கள் - வணக்கம் இந்தியா ஸ்பெஷல் - பகுதி 2 - VanakamIndia

2017 புத்தாண்டு பலன்கள் – வணக்கம் இந்தியா ஸ்பெஷல் – பகுதி 2

கணித்தவர் : ஜோதிட விஷாரத் அ.பாலசேகர் எம்.எஸ்.சி (ஜோதிடம்)

நேற்று வெளியான புத்தாண்டு பலன்களின் தொடர்ச்சி…

 
துலாம்

(சித்திரை 3, 4 ம் பாதம் , சுவாதி , விசாகம் 1,2,3 பாதம்)

இதுவரை நடந்து வந்த ஏழரைச் சனி இந்த விலகுகிறது. பிரச்சனைகள் அகலும். நிலம் வீடு சம்பந்தமான வில்லங்கள் விலகும். புது வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உழைக்காத பணம் வந்து சேரும்.

கல்வி தொடரும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் மகிழ்வூட்டும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடல் நலம் சிறிது பாதிக்கப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு சலசலப்பு உண்டாகும். பொதுவாக இந்த ஆண்டு சிறப்பாகவே நடைபெறும்.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம் , கேட்டை)

இந்த ஆண்டு ஜென்மச்சனி பாதச் சனியாக மாறுகிறது. இது நன்மையைத் தரும். வாகன யோகம் சிறப்பாக இருக்கிறது. நிலபுலன்களின் மூலம் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டு.

உடல் நலம் முன்னேறும். பிரயாணங்களினால் நன்மை உண்டாகும். கல்வியில் வெற்றி கிட்டும். வழக்குகள் சமாதானமாக முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குழந்தைகளினால் செலவீனங்கள் உண்டாகும்.

காதல் விவகாரங்கள் மனவேதனையைத் தரும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு்ப் பிரயாணங்கள் ஏற்படும். வீடு மாற்றம் உண்டாகும். பங்குச் சந்தை வியாபாரம் ஸ்பெகுலேஷன் நன்மையைத் தராது. பொதுவாக இந்த ஆண்டு நல்ல பலன்களையேத் தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த ஆண்டு ஜென்மச்சனி ஆரம்பமாகிறது. கவலை வேண்டாம் . உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காவிட்டாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. கமிஷன் ஏஜன்சி தொழில் சிறப்பாகவே நடைபெறும்.

விளம்பரத் தொழில், எடிட்டிங் போன்றவை நல்ல லாபத்தைத் தரும். உங்கள் கதை, கட்டுரைகள் புகழ், பெயரைக் கொடுக்கும். நேர்முகக் காணல் வெற்றியைக் கொடுக்கும்.

ஒப்பந்தக்காரர்கள் நன்றாக பயன் அடைவார்கள். வீடு, வாகனம் யோகம் உண்டு. கல்வியில் வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நலம் தேறும். நில புலன்கள் மூலம் பண வரவு உண்டாகும்.

நகைகள் துணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். ராகு எட்டில் சஞ்சரிப்பதால் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. கடன் தொல்லை தராது. பொதுவாக இந்த ஆண்டு சிறப்பாகவே நடைபெறும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இந்த ஆண்டு ஏழரை சனி ஆரம்பமாகிறது. கவலை வேண்டாம். சனி ராசி அதிபதியாக இருப்பதால் கெடுதல் மிக செய்யாது. செலவீனங்கள் அதிகரித்து காணப்படும். அத்தனையும் சுபச்செலவுகளே.

குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பண முதலீடுகள் அதிகரிக்கும். உடல் நலக்குறைவு சிறிது ஏற்பட்டு மறையும். வீண் விவாதங்கள் தவிர்த்தல் நன்மை தரும். தொழில் நிமித்தம் அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன்

கூடிய இடமாற்றம் உண்டாகும். கமிஷன் ஏஜென்சி அட்வர்டைசிங், எடிட்டிங், போன்ற
தொழில்கள் லாபகரமாக நடைபெறும்.

புதுத் தொழிலுக்கான முதலீடுகள் செய்ய நேரிடும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும்.

திருமண தடைகள் உண்டாகும். பொதுவாக இந்த ஆண்டு பெரும்பாலான நல்ல பலன்களையே தரும்.

கும்பம்

(அவிட்டம் 3 , 4ம் பாதம், சதயம் , பூரட்டாதி 1, 2,3ம் பாதம்)

சனி இந்த ஆண்டு லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க தொடங்குகிறது. ராகு அதிபதி சனி லாபத்தில் இருப்பதினால், பலப்பல நன்மைகள் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணம் பல வகைகளில் வரும். புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். உயர் கல்விக்குரிய வாய்ப்பு கிடைக்கும். குடுமப்த்தில் மகிழ்ச்சி பொங்கும்.

நகைகள் துணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன நில புல யோகங்கள் உண்டு.

திருமணங்கள் நடைபெறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் கடன்கள் தீரும். மதிப்பு செல்வாக்கு உயரும். பொதுவாக இந்த ஆண்டு ஒரு சிறப்பான வருடமாகும்

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சனி பத்தாமிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிலருக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.

பதவி கிடைக்கவும் பதவி போகவும் வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஒரு சில அவப்பெயர் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

அறுவை சிகிச்சை, விபத்து ஆகியவற்றிற்கு வாய்ப்பு இருப்பதினால் கவனம் தேவை. மன அமைதி குறைந்து காணப்படும். வழக்குகள் தோல்வியைச் சந்திக்கும். சிலருக்கு ஒரு சில தொழில்களை மூடவும் வாய்ப்புண்டு.

சில வம்பு வழக்குகள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியாக இருந்தால் சோதனைகளைத் தாண்டலாம். பொதுவாக இந்த ஆண்டு சோதனைகள் மிகுந்தே காணப்படும்.

பகுதி 1-ஐப் படிக்க…

 

 
 

குறிப்பு:

ஜோதிடர் அ.பாலசேகர்

பி.எஸ்சி மற்றும் பேச்சலர்ஸ் ஆஃப் லைப்ரரி சயன்ஸ் படித்துவிட்டு,இளவயதில் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி வந்த பாலசேகர், புதிய சிந்தனைகள் உள்ளவராக இருந்தார். புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். நவீன கருத்துக்களுடன் நாடகங்கள் எழுதி இயக்கி சக இளைஞர்களுடன் மேடையாக்கம் செய்து வந்தார்.

பிரபல ஜோதிடர் ஒருவருக்கும் இவரது குழுவைச் சார்ந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஜோதிட புத்தகங்களை படித்து தெரிந்து விட்டு வந்து பேசுகிறேன் என்று பாலசேகர் எழுந்துவிட்டார். அந்த ஜோதிடரிடமே சில புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார்.

இவர் ஜோதிடம் படித்ததைத் தெரிந்து கொண்ட உறவினர்கள், தங்களுக்கு பலன் சொல்லுமாறு வினவினார்கள்.. பாலசேகரின் கணிப்பு முற்றிலும் மாறாக இருந்தது. விவாகரத்துக்காக நீதிமன்றம் வரை சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்று அதன் சூழலையும் விவரித்தார்.

உறவினர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்த நிலையில் , அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்து பாலசேகரின் கணிப்பு கவனத்திற்கு உள்ளானது. இதைப்போல் மேலும் பல கணிப்புகள் சரியாக இருந்ததை பார்த்தபிறகு, இன்னும் முழுமையாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள விரும்பினார்.

ஆரம்பகாலத்தில் வழக்கமான ஜோதிட முறையை பின்பற்றியவர், பின்னர்கே.பி ஜோதிடம், நாடி ஜோதிடம், Horory ஜோதிடம் என பல முறைகளையும் கற்றறிந்தார். ஜோதிடப் பெரியவர் ஒருவர் அவருக்கு தொன்மையானபுத்தகங்களைக் கொடுத்து ஆசிர்வதித்து ஜோதிடத்தை முழு நேரப் பணியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பாலசேகரும் ஜோதிடத்திற்காக தன்னுடைய முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டார்.ஜோதிடத்தில் எம்.எஸ்.சி மேற்படிப்பும் கற்று தேர்ந்தார்.1978ல் ஜோதிடப் பலன் கூற ஆரம்பித்த இவருக்கு பல முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு.

ஜெயலலிதாவுக்கு…

1997ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்றுஅனைவரும் கூறிவந்த நிலையில், அவர் நிச்சயம் மீண்டும் முதல்வர் ஆவார் என்று (எக்ஸ்பிரஸ் ஸ்டார்டெல்லர்-ல்) கணித்திருந்தார்.

அப்போது இந்த கணிப்பு மற்றவர்களால் வேடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் 2001 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆன போது மேலும் பல அரசியல் தலைவர்கள் இவரது வாடிக்கையாளர் ஆனார்கள். தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் உட்பட அவருடைய பல அரசியல் கணிப்புகள் துல்லியமாக இருந்து வருகிறது. ஜோதிஷ் விஷாரத் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜோதிடர் ’ஜோதிஷ் விஷாரத்’ அ.பாலசேகர் எம்.எஸ்.சி அவர்களை Balasekar@aryainfosystem.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!