அதிமுக ஆட்சி ஓராண்டு நிறைவு: 2016 தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? - VanakamIndia

அதிமுக ஆட்சி ஓராண்டு நிறைவு: 2016 தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

திமுகவின் வாக்கு வங்கி என்பது 31 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரைதான். 1996 தேர்தல் மட்டும் விதிவிலக்கு. முதல்முறையாக வரலாறு காணாத அளவில் 44 சதவீத வாக்குகளைப் பெற்று, 16 ஆண்டுகால கடுமையான வனவாசத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கியமான காரணம், ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை புரிந்துகொண்டு, மாநிலம் தழுவிய ஒரு எதிர்ப்பலையை உருவாக்கி, எதிர்ப்பு வாக்குகளை திமுக – தமாக கூட்டணிக்கு பெற்று தந்தது, சூப்பர் ஸ்டாரின் கடைசிநேர சன் டிவி பிரச்சாரம்தான்.

சூப்பர் ஸ்டாரின் பிரச்சாரம், சாமானியர்களை திமுக பக்கம் சாய வைத்தது. மாற்று அணியாக உருவெடுத்திருந்த மதிமுக-பாமக-வாழப்பாடி ராமமூரத்தி அணியை மிரளவைத்தது.

“இதுவரைக்கும் நீங்க பார்த்த கலைஞர் வேறு; இனி பார்க்கப்போகும் கலைஞர் வேறு. ஜெயலலிதா தோற்கப்போவது உறுதி; ஆனால் ஒரு இடம் கூட கிடைக்காமல், இமாலயத்தோல்வி கிடைப்பதற்கு வழி செய்தாகவேண்டும். அதற்கு ஒரே வழி, வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் திமுக- தாமகா அணிக்கு பெற்றுத்தரவேண்டும்”.

-இதுதான் சூப்பர் ஸ்டாரின் வேண்டுகோள்.

திமுகவுக்கும் தமாகவுக்கும் இல்லாத நம்பிக்கை சூப்பர் ஸ்டாருக்கு இருந்தது. 1996 தேர்தல் முடிவுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தமிழகத்தில் எந்தவொரு தலைவரும் செய்யாத வகையில், மாபெரும் வெற்றிக்கான கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பெருந்தன்மையுடன் மறுத்து, அதுவொரு சிறிய பணி என்று சூப்பர் ஸ்டார் மறுத்தாலும், நாம் மறந்துவிட முடியாது. ஆனால் அந்தத் தேர்தல வெற்றி விழா கூட்டத்தில் ஒப்புக்குக் கூட ரஜினிக்கு நன்றி சொல்லவில்லை முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி.

1996க்கு பின்னர் எந்தவொரு தேர்தலிலும் 33 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறமுடியாமல் தோல்வியை தழுவியோ அல்லது சிறுபான்மை அரசையோ திமுக அமைக்க நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த வரலாறு.

-ஜெ ராம்கி

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!