அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு... பாகுபலி மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு? - VanakamIndia

அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு… பாகுபலி மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு?

அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு…

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் ஒரு முன்னோடியாகத்தான் இப்போதும் உங்களைப் பார்க்கிறோம். அபூர்வ சகோதரர்கள் முதல் ஹேராம் வரை எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்.

இந்தக் கடிதத்தின் சாராம்சம் ஒன்றே ஒன்று தான்… பாகுபலி மீது தங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு?

நடிகராக நாம் எத்தனையோ செய்கிறோம்… ஆனால் ஒற்றை விரலை ஆட்டி, ஒரு சிகரெட்டை தூக்கிப்போட்டு கவ்வி நம்மை எப்போதுமே இரண்டாம் இடத்தில் இருக்க வைத்து விட்டாரே என்று ரஜினியைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்கள். ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள். ரஜினி பொது வாழ்வில் நடிப்பதில்லை. இரண்டாவது தமிழ் சினிமாவில் கணக்கெடுத்தால் ரஜினியால் வாழ்ந்தவர்தான் அதிகமாக இருப்பார்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்கு சற்றுகூடப் பொருந்தாது.

உத்தம வில்லன் விஷயத்தில் என்ன நடந்தது? ஏன் லிங்குசாமி இன்னும் மீள முடியாமல் தவிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியாதா…?

ரஜினியை வைத்து படம் எடுக்கும் லைகா நிறுவனத்தை என்னவெல்லாம் செய்து உங்கள் வழிக்கு கொண்டு வந்தீர்கள். ஆனால் அதாவது முழுமை அடைந்ததா?

சக கலைஞனைப் பாராட்டுவதில், வாழ்த்துவதில் என்ன ஆகிவிடப் போகிறது? பாகுபலி மீது நீங்கள் மீண்டும் மீண்டும் ஏன் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறீர்கள். நடிகராக நம்பர் ஒன்னுக்கு வர முடியவில்லை. கிரியேட்டராகவாவது இடத்தைத் தக்க வைக்கலாம் என்று பார்த்தால் ராஜமௌலி வந்து எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டாரே என்ற வலிதான் உங்கள் வார்த்தைகளில் அதிகம் தெரிகிறது.

இந்த மைதானத்தில் எல்லோரும் ஓடுவார்கள். நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட வென்றவன் வென்றவன்தான். தோற்றவன் சொல்லும் அழுகுணிகள் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உண்மையில் ராஜமௌலியிடம் நீங்கள் தோற்றதாக நாங்கள் எண்ணவில்லை. அது அவருடைய பாதை. இது உங்கள் பாதை. உங்கள் பாதையில் நீங்கள் கடந்தவைகளை யாராலும் இனி கடக்க முடியாது. உங்கள் பாதையிலேயே மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் பயணியுங்கள். போதும். இன்னும் பல சாதனைகள் படைக்கலாம்.

வயதானால் வரும் தடுமாற்றம் தவறில்லை. ஆனால் அறிவு வயதாகும்போது வரும் தடுமாற்றம் நம் புகழை அழித்துவிடும். அறிவுக்கு வயதாகாமல் பார்த்துக்கொள்வது சக மனிதர்களிடம் நேசம் காட்டுவதில் அடங்கியிருக்கிறது.

அன்பும் நன்றியும்…

– உங்கள் ரசிகன்

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!